ஏற்றுமதி தொழிலில் சந்தைப்படுத்துதல் முக்கியமான பங்காற்றுகிறது. எல்லோரிடமும் இந்த உலகத்தில் விற்பனை செய்வதற்கு பல பொருள்கள் உள்ளது. அதனை வாங்குவோரிடம் கொண்டு சேர்ப்பது குறித்த அறியாமை தான் தொழில் முழுமை பெறாமல் பாதி முயற்சியுடன் தேக்கமடைந்து நிற்கிறது. என்ன என்ன வழிகளில் நாம் நமது பொருளைகளை சந்தைப்படுத்துவது என்ற சில அனுபவ பகிர்வை பட்டியலிடுகிறோம்.
உலக சந்தைக்கு நமது பொருள்களை அனுப்பும் முன்னர் அந்த நாட்டில் அவை எப்படி பாக்கிங் செய்து விற்பனை ஆகிறது என்ற அறிவை கணினியின் உதவியுடன் நீங்கள் கண்டறியலாம்.
அந்த பொருள் பாக்கிங் செய்ய என விதமான முறையினை தாள்களை, பிளாஸ்டிக் பொருள்களை, பாலிதீன் கவர்களை, மர பெட்டிகளை, டின்களை பயன்படுத்தி உள்ளனர் என்பதை கண்டறியுங்கள்.
உங்களுக்கு போட்டியாக உள்ள பொருள்களை அயல்நாட்டில் இருந்து தருவித்து அதனை போன்று உங்களுடைய பாக்கிங் தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள்.
பாக்கிங் மீது எழுதி உள்ள அனைத்து தகவலும் இடம்பெறும் வண்ணம் பார்த்து கொள்ளுங்கள். தயாரித்த நாள் காலாவதை ஆகும் நாள் உள்ள பொருளின் கலவையின் சதவிகிதம் விலை போன்றவை மறக்கலாம் குறிப்பிடுங்கள்.
உங்களுடைய விலையை நிர்ணயம் செய்த பின் அதனை தெரியப்படுத்தி வாங்குவோரை நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சி எடுங்கள்.
நேரடியாக சாம்பிள் இறக்குமதியாளருக்கு அனுப்பி ஆர்டர் கேட்கலாம்,
நண்பர்கள், உறவினர்கள் மூலம் கொடுத்து அனுப்பி ஏற்றுமதி ஆர்டருக்கு முயற்சி செய்யலாம்.
ஏற்றுமதி ஆர்டர் பெற்று தரும் இடைத்தரகர் மூலம் ஆர்டர் பெற முயற்சி செய்யலாம்.
நேரடியாக அந்த நாட்டிற்கு பயணம் செய்து வாடிக்கையாளர்களை சந்தித்து ஏற்றுமதி ஆர்டர் பெறலாம்.
இன்னும் சந்தைப்படுத்த பல யுக்திகள் உள்ளது அவற்றை ஒவ்வொரு நாட்டின் சந்தைக்கு ஏற்ப செய்யப்பட வேண்டும். ஏற்றுமதி அல்லது இறக்குமதி தொழில் செய்ய விரும்புவோருக்கு அனைத்து உதவிகளையும் நிறுவனம் துவங்குவதால் இருந்து சந்தைப்படுத்துவது வரை நமது தொழில் ஆலோசனைகள் வழங்கப்படும். சந்திக்க முன் அனுமதி பெற தொடர்புக்கு திரு. ஸ்ரீநிவாசன் 7339424556
Seafood. Fresh chilled and frozen interested importers pls contact us. We can help local suppliers to become exporters also.