தனிப்பட்ட விஷயத்திற்காகவும், உறவினர்களை சந்திக்கவும், சுற்றுலாவாக செல்வது போன்றவற்றில் ஒரு நபர் 5000 அமெரிக்க டாலர் கொண்டு செல்ல முடியும்.
வியாபார விசயமாக ஒருவர் செல்லும் பொழுது 25000 அமெரிக்க டாலர் வரை அவர் கொண்டு செல்லலாம். அந்நிய செலவாணி நிர்வாகச் சட்டமான பேமா வை ( Foreign Exchange Management Act) இந்திய அரசு அறிமுகம் செய்த பிறகு அலுவலக/வியாபார விசயமாக இரண்டு நாட்கள் வெளிநாடு சென்றால்கூட, 25000 டாலர் வரை வெளிநாடு கொண்டு செல்ல அனுமதிக்கபடுகிறது.