வைரம்

உறுதியின் மறுபெயர்தான் வைரம், நட்சத்திரம் போல மின்னும் ஜெம்கல். அன்பு, காதல், வாழ்க்கைதரம் இவற்றை வெளிபடுத்துவது வைரம். அழகுதோற்றதை கொடுப்பதில் வைரத்திற்கு நிகர் வைரமே. வைரத்தை 4 சி கொண்டே மதிப்பிடபடுகிறது. 1. க்ளாரிட்டி, 2. கலர், 3. கட், 4. காரட்.
Clarity = தெளிவு
வைரம் உருவாகும் பொழுது உள்ளும் புறமும் ஏற்படும் தெளிவை காட்டும். கோடுகள்உள்ளே ஏற்பட்டு உள்ளவை சேர்பு inclusions எனப்படும். மேலோடமாக உள்ளவைகள் கரைகள் blemishes எனப்படும். இன்க்ளுசன் எனபடுவது வெளியில் உள்ள சிறு தூசி, சிறு தெறிப்பு, இறகு என சொல்லப்படும் வெண்மையாகவோ அல்லது மேக புகையாகவோ இருக்கும்.
clarity_pic_red-fissure
கிறிஸ்டல் கற்களுக்கு இடையில் உருவாகும் வைரம் பூமியின் உள்ளே புதைவுண்டு இருக்கிறது. தரம், அளவு, வண்ணம், இடம், நோக்கு நிலை, கல்லினில் உள்ளே உள்ள சேர்ப்பின் வெளிபாடு போன்றவை வைரத்தின் தெளிவை, தரத்தை உறுதி செய்கிறது. சேர்ப்பு இல்லாத அல்லது சிறு சேர்ப்பு உடைய வைரகல் அதிக மதிப்பு உடையதாக இருக்கும்.
Dia

ஜெம்மாலஜி தெரிந்தவர்கள் வைரத்தை 10 எக்ஸ் பெரிதாக காட்டக்கூடிய லென்ஸ் பயன்படுத்தி வைரத்தின் முகத்தை பரிசோதிப்பார்கள். மைக்ரோஸ்கோப் மற்றும் கையில் கொண்டு செல்ல கூடிய லென்ஸ் பயன்படுத்தி உள்சேர்ப்பை கணக்கிடுவார்கள்.

அனுபவப்பட்டவர்கள் வைரத்தின் உள் உள்ள அடுக்குகளை கண்டறிவார்கள். இது ஒவ்வொரு வைரத்தின் தனி அடையாளம் மாப் போன்றது, இரண்டு கற்களுக்கு ஒரே உள் அடுக்குகள் அமைந்து இருக்காது.தனி மனிதனின் கைரேகை போல இந்த பிளாட் வைரத்தின் கைரேகை ஆகும்.