வியாபாரியிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த நைஜீயர்கள்

pakka1

முந்திரி பருப்பு ஏற்றுமதி

மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த வியாபாரி சமீர் லட்சுமிசந்த் (வயது45). இவருக்கு பேஸ்புக் மூலம் நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 பேரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் முந்திரி பருப்புகளை வாங்கி ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் தருவதாக கூறினர். இதை நம்பிய சமீர் லட்சுமிசந்த் ரூ.1 லட்சம் 65 ஆயிரத்துக்கு முந்திரி பருப்புகளை வாங்கி கப்பலில் நைஜீரிய நாட்டுக்கு அனுப்பினார். அங்கு விற்பனை செய்ததில் அதிக லாபம் கிடைத்ததாக கூறி அந்த நபர்கள் சமீர் லட்சுமி சந்தின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் செலுத்தினார்கள்.

இந்த நிலையில், அந்த நபர்கள் அதிகளவில் முந்திரி பருப்புகளை வாங்கி அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். இதற்காக அவர்கள் நவிமும்பையை சேர்ந்த ஒரு வியாபாரியிடம் செல்லும்படி சமீர் லட்சுமிசந்தை அறிவுறுத்தினர். இதை நம்பிய அவர் அந்த நபர்கள் தெரிவித்த வியாபாரியை நவிமும்பையில் சந்தித்து பேசினார்.

8 பேர் கைது

அப்போது முதலில் ரூ.23 லட்சத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தும்படி அந்த வியாபாரி கூறினார். அதன்பேரில் சமீர் லட்சுமி சந்த் அவரது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினார். அதன்பின்னர் அந்த வியாபாரியையும், நைஜீரியை சேர்ந்த சேர்ந்தவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மின்னஞ்சலை பயன்படுத்தி ரூ.6.25 கோடி தில்லுமுல்லு

scam

தூத்துக்குடியில் உள்ள மீன் ஏற்றுமதி நிறுவனத்தின் மின்னஞ்சலை பயன்படுத்தி, ரூ.6.25 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் உணவு நிறுவனம் வெளிநாடுகளுக்கு இறால், கனவா போன்ற மீன்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் செல்வின் பிரபு, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயா பிரின்ஸிடம் அளித்த புகார் மனு விவரம்:

squid-807028

இத்தாலியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கடந்த 15 ஆண்டுகளாக இறால், கனவா மீன்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 14 சரக்குப் பெட்டகங்களில் மீன்களை ஏற்றுமதி செய்த நிலையில் அதற்கான தொகை ரூ.6.25 கோடி இதுவரை எங்களுக்கு வந்து சேரவில்லை.

இதையடுத்து, அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டபோது பணத்தை இங்கிலாந்தில் உள்ள ஒரு வங்கியில் செலுத்திவிட்டதாகவும், அதற்கான அனைத்து ரசீதுகளும் தங்களிடம் உள்ளதாகவும் கூறினர்.

எங்களது மின்னஞ்சலை யாரோ தவறாகப் பயன்படுத்தி இத்தாலி நிறுவனத்திடம் இருந்து ரூ.6.25 கோடி பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.