
யார் இந்த கிருஷ்ணா?
பிறந்து, வளர்ந்தது, படித்து, மணம் முடித்தது கோயாம்புத்தூர். 25 ஆண்டுகளுக்கு முன் பெரு நாட்டுக்கு சென்று செட்டில் ஆகி அந்த நாட்டின் குடிமகனும் ஆகிவிட்டார். குடும்பத்துடன் அங்கே வாழ்கிறார்.
சரி, பெரு நாட்டில் எப்படி சம்பாதிக்கிறார்?

இரு சக்கர வாகனங்களை இறக்குமதி செய்து தனது வினியோகஸ்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
அவரிடம் பேசியதில் மற்ற விபரங்களை பற்றி பார்போம்…
உலக தமிழ் உறவுகள் ஒன்றினையும் ஓம் குரூப்பில் புதிதாக இணைந்து உள்ள சகோதரர் திரு.கிருஷ்ணாவுடன் நேற்று இரவு அறிமுக கூட்டமும், தொழில் வாய்ப்புக்களை பற்றிய கலந்தாய்வும் செய்யபட்டது. கிட்டதட்ட 1:45 மணி நேரம் கூட்டம் நடந்தது அவர் வழங்கி உள்ள தொழில் வாய்ப்புக்களை பற்றிய பட்டியலை கீழை கொடுத்து உள்ளோம்.
தங்கம்:
பெரு நாட்டில் இருந்து தங்க கட்டிகள் ஏற்றுமதி செய்யலாம். லண்டன் மெட்டல் விலையில் 0.25% தள்ளுபடி கிடைக்கும். இந்தியாவுக்கு இறக்குமதி செய்தால் இந்திய அரசு 65% வரி சலுகை தருகிறது. இந்திய தங்க ரீபைனரிகள் ஆண்டுக்கு 15000 கிலோ தங்கள் வாங்குவது குறிப்பிட தக்கது.
வெள்ளி:
3% தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
கிடைக்கும் மற்ற உலோகங்கள்:
ரோடியம், பிளான்டினியம், பலாடியம் பெரு நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்ய முடியும்.
திராட்சை கொட்டை எண்ணை:
இந்த எண்ணையை பயன்படுத்தி சமைத்தால் ரத்த சம்மந்தமான எந்த நோயும் மனிதனை அண்டாது. சிகப்பு அனுக்கல் செத்து புற்று நோய் வர காரணமான மற்ற எண்ணைகளை போல இல்லை. வெப்ப நிலை 50%~60% சூட்டுக்கு மேலே எந்த சமையல் எண்ணையும் உடைந்துவிடும். திராட்சை கொட்டை எண்ணை தன்மை மாறாதது. இந்த எண்ணை இந்தியாவில் இறக்குமதி செய்ய விரும்புவோருக்கு உதவலாம்.
அர்ஜன்டினா நாட்டில் இருந்து ஆலிவ் கொட்டை ஏற்றுமதி, ஆலிவ் எண்ணை ஏற்றுமதி செய்யலாம்:-
ஆலிவ் எண்ணை பற்றி பேசும் போது ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் தான் உங்கள்
நினைவுக்கு வரும். உண்மை என்ன என்னால் உலக போர் நடக்கும் போது அவர்களின் இயற்கை வளங்கள் பெருமளவு அழிந்து விட்டன. அந்த நேரத்தில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்சில் இருந்து வந்த வெள்ளையர்கள் அங்கிருந்து கொண்டு வந்து உற்பத்தி செய்த தோட்டங்கள் இப்போது அதிகமாக விளைகிற இடம் தென் அமெரிக்க நாடுகள் பெரு, சில்லி, அர்ஜன்டினா தான். தரமான ஆலிவ், திராட்சை ஒயின் போன்றவற்றை ஏற்றுமதி செய்யலாம்.

இப்படி பேச்சு நடந்து கொண்டே இருக்கும் போது ஆப்பிரிக்கா கானா நாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய அடிதளம் அமைத்து உள்ள சகோ. ஜெர்மனி பாபு அவர்களை பெரு கிருஷ்ணாவுக்கு அறிமுகம் செய்து வைத்தோம்.
ஓம் குடும்ப தமிழ் உறவுகளை சந்திக்க நேரடியாக பெருவில் இருந்து ஜீன் மாதம் 10-17 தேதிகளில் சென்னைக்கு வருவதாக கூறி உள்ளார் பெரு கிருஸ்னா அவரை நேரடியாக சந்திக்க விரும்பும் ஏற்றுமதியாளர், இறக்குமதியாளர்கள் தங்கள் நிறுவனத்தை பற்றிய அறிமுகத்துடன் ஈமெயில் மூலமாக தொடர்பு கொண்டு முன் கூட்டியே நேரம் பெற்று கொள்ளவும். ஈமெயில்: tamileximclub@gmail.com
ஓம் குரூப் நர்வாகம்
0065-90765060