
அட ஒன்னும் இல்லங்க சாதாரண பரிசு குலுக்கல் தான் 1 முதல் 49 க்குள்ள 6 நம்பர் கொடுப்பாங்க, குலுக்கல் முடிஞ்சு 6+1 7 நம்பர் தேர்ந்து எடுப்பாங்க 1 நம்பர் போனஸ், அதுல குறஞ்சது நம்ம வாங்கின சீட்டில் உள்ள 3 நம்பர் ஒத்து போனா $10 குறைந்த பரிசு அதுக்கு மேலே பல பெரிய பரிசுகள் உண்டு 6 நம்பரும் ஒத்து போனா முதல் பரிசு, 2 பேர், 3 பேர் என முதல் பரிசு எண்கள் பெற்று வந்தா பரிசு தொகையை பங்கு போட்டு கொடுப்பாங்க. அவ்வளவு தான், இதுக்கு மேலே தெரிஞ்சுக்க கூகிள்ள what is Singapore toto அப்படினு தேடி படிங்க ரயில் பெட்டி மாதிரி விளக்கம் நீண்டுகிட்டே போய்கிட்டு இருக்கும் 😇 மேலே உள்ளது எளிய விளக்கம், 1 சீட்டின் விலை ௹.199
Toto Price & Prize Details டோட்டோ விலை மற்றும் பரிசு விபரம்
Price-விலை
டோட்டோ நம்பரை நாமே தேர்வு செய்தால் சீட்டின் விலை எவ்வளவு
(*) என்பது ௹.199தின் எண்ணிக்கை அளவு
01-49 எண்களுக்குள்6 எண்கள் கணினியின் தேர்வு- ௹.199 (1*)
6 எண்கள் வாங்குபவரின் தேர்வு- ௹.398 (2*)
7 முதல் 12 எண்கள் வரை வாங்குபவர் தேர்வு (system bet)
7 எண்கள் = ௹.796 (4*)
8 எண்கள் = ௹.2189 (11*)
9 எண்கள் = ௹.6567 (13*)
10 எண்கள் = ௹.16517 (83*)
11 எண்கள் = ௹.36417 (183*)
12 எண்கள் = ௹.72635 (365*)
5 எண்கள் வாங்குபவர் தேர்வு (system roll) 6வது எண் 100% வெற்றி எண்னாக எடுத்து கொள்ளபடும்- ௹.3582 (18*)
Prize- பரிசு டோட்டோ பரிசு (prize) கிடைக்கும் வாய்ப்புக்கள் பற்றிய தகவல்
அ). 1.40 கோடி வாய்ப்பில் முதல் பரிசு (ஜாக்பாட் பரிசு).
ஆ). 23 லட்சம் வாய்ப்பில் இரண்டாம் பரிசு.
இ). 55 ஆயிரம் வாய்ப்பில் மூன்றாம் பரிசு
ஈ) 22 ஆயிரம் வாய்ப்பில் நான்காம் பரிசு
உ). ஆயிரம் வாய்ப்பில் ஐந்தாம் பரிசு
ஊ). எண்ணூறு வாய்ப்பில் ஆறாம் பரிசு
எ). அறுபது வாய்ப்பில் ஏழாம் பரிசு