அது ஒன்னும் இல்லங்க வெளி உலகம் தெரியாம அயல்நாடு சென்று இந்திய குடிமகன் சிக்கி சின்னா பின்னம் ஆகிவிட கூடாது என்பதற்காக இந்திய அரசு வைத்த அளவு கோள் ECR/ECNR. அயல்நாடு செல்பவரிடம் எங்கு போறிங்க, எங்கு தங்குவிங்க, எப்படி திரும்ப வருவீங்கனு விசாரனை செஞ்சு அனுப்புவாங்க அவ்வளவு தான் அது தான் ECR பாஸ்போர்ட். ECNR னா எந்த வித விசாரணையும் இல்லாம அயல்நாடு போக அனுமதிப்பாங்க ஏர்போர்டில் உள்ள இந்திய குடிபெயர்வு அதகாரிங்க.
ECNR பாஸ்போர்ட்டா இருந்தா குடிபெயர்வு சோதனை தேவையில்லை (ஈசிஎன்ஆர்).
சரி, வாங்க யாருக்கு எல்லாம் ECNR பாஸ்போர்ட் கிடைக்கும், ECR பாஸ்போர்ட் இருப்பவங்க எப்படி ECNR பாஸ்போர்டுக்கு மாற்றி கொள்வதுனு விளக்கமா பார்போம்
10 ஆம் வகுப்பு / கிரேடு (மெட்ரிகுலேஷன் அல்லது உயர் கல்வித் தேர்ச்சி சான்றிதழ்) தேர்ச்சி பெற்றிருந்தால் அல்லது உயர் பட்டம் பெற்றிருந்தால் உங்கள் பாஸ்போர்ட் ECNR பிரிவின் கீழ் வரும்.
கீழே உள்ள நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பூர்த்தி செய்தால், ECNR வகை பாஸ்போர்ட்டுக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள்.
அரசாங்க உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள்.
அரசிதழில் வெளியிடப்பட்ட அரசு அதிகாரிகள், அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள்.
50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் 18 வயது வரை குழந்தைகள்.
வருமான வரி செலுத்துவோர் (விவசாய வருமான வரி செலுத்துவோர் உட்பட), அவர்களின் மனைவி மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
பொறியாளர்கள், டாக்டர்கள், CA போன்ற தொழில்சார் பட்டம் பெற்றவர்கள், அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கான நிரந்தர குடியேற்றம் / குடியுரிமை விசாக்களுக்கான விசாக்களை வைத்திருப்போர்.
3 மூன்று வருடங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் நபர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள்
இந்திய நர்சிங் கவுன்சில் சட்டம்-1947ன் கீழ் நர்சிங் டிப்ளமோ பெற்ற நபர்கள்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ பெற்றவர்கள்.
தொடர்ச்சியாக கடலில் கப்பல் வேலைகளில் பணிபுரிபவர்கள்.
உலக தமிழ் மக்களுக்கு அறிவூட்டும் செய்திகளை நமது இணையதள பக்கம் மூலமாக கொண்டு சேர்களாம், அவ்வாறு செய்தி இருந்தால் வாட்சப் மூலமாக அனுப்பிவைக்கவும். வாட்சப்: +6590765060