லண்டனுக்கு படிக்க போன புதுக்கோட்டை தம்பி சக்தி அங்கு இருக்கும் சூப்பர் மார்கட்ல வேலை செய்றார். அப்போ அங்கு வரும் காய்கறி சப்ளையர்களுடன் பழக்கம் ஏற்படுகிறது அவர்கள் கேட்ட இந்திய காய்கறிகளை நமது ஓம் முருகா தமிழ் குடும்ப உறவுகளிடம் அனுப்ப ஆர்டர் கொடுத்தார்.
இறக்குமதியாளர்களிடம் சக்தி என்பவர் யார் நல்ல தரமான காய்கறிகளை குறைவான விலைக்கு சொன்ன நேரத்தில் சப்ளை செய்கிறாராம் என சந்தையில் பேச்சு தினசரி ஆனது.
சொந்தமாக ஒரு இறக்குமதி நிறுவனத்தை லண்டனில் துவங்கி நடத்துகிறார், தன்னுடன் கூட படித்த நண்பர்களை உதவிக்கு சேர்த்து கொண்டார். இறக்குமதி மற்றும் சந்தைபடுத்தும் தொழிலில் ஏறுமுகமாக சென்றது.
இந்தியா திரும்பி ஏற்றுமதி நிறுவனத்தை துவங்கினார், லண்டன் மட்டும் அல்லாமல் அனைத்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். ஆர்டர்கள் மேல் ஆர்டர்கள் குமிந்தாலும் தன்னால் செய்ய முடிந்த அளவையும், நிதானத்துயும் தம்பி இழக்கவில்லை.
சில வாரங்களுக்கு முன்னர் அவரிடம் கேள்விபதில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி நம் தமிழ் குடும்பத்தில் இருந்து பலரும் கலந்து கொண்டு தொழில் சந்தேகத்தை தீர்த்து கொண்டனர். அவரின் குரல் பதிவை கேட்க விரும்பினால் 9943826447 என்ற எண்ணில் கேட்டு பெறலாம்.
தம்பி சக்தியிடம் காய்கறி ஏற்றுமதி ஆர்டர் குவிந்தாலும் நிறைய வாய்ப்புக்கள் விரையமாவதாகவே உணர்கிறோம். ஒருபுறம் நான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று வாய்ப்பை தேடும் தமிழ் உறவுகள், மறுபுறம் நிறைய வாய்ப்பு இருந்தும் தன்னால் அளவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்ய முடியாத தம்பி… ஏன் இரண்டையும் ஒன்றினைத்து காய்கறி ஏற்றுமதி தொழிலில் அனைவரும் வெற்றி அடைய உங்களால் முடிந்த யோசனைகளை நீங்கள் வழங்க கூடாது? குரல் பதிவாக உங்கள் பதிலை வாட்சப் செய்யவும்
உங்களிடம் தொழில் வாய்ப்புகள் இருந்தால் தாராளமாக நமக்கு அனுப்பி வையுங்கள் தமிழ் எக்சிம் கிளப் பக்கத்தில் வெளியாகும்.
👏 வணக்கம் 9943826447