தென் இந்தியாவில் உள்ளவர்கள் அயல்நாடுகளில் தான் பணம் கொட்டி கிடக்கிறது, ஏற்றுமதி தொழில் செய்தால் பல கோடிகளை சம்பாதித்துவிட முடியும் என அயராது உழைத்து ஒரு கட்டத்தில் சோர்ந்து விடுகிறார்கள்.
உள்நாட்டில் உள்ள வியாபார வாய்ப்புகளை பற்றிய யாருமே பேசுவதும் இல்லை மற்றவர்களுக்கு வழிகாட்டுவதும் இல்லை, நமது தமிழர் திருவண்ணாமலை ராஜசேகரன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக வடநாட்டில் பெரிய வெங்காயம் மொத்த வியாபார தொழில் செய்து வருகிறார்.
உங்களுடன் அவருடைய தொழில் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதுடன், உங்களுக்கு உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். அவர் கடந்து வந்த தொழில் பாதையில் வடநாட்டில் உள்ள வியாபார வாய்ப்புகள் பற்றி விரிவாக விளக்கம் அளிக்க உள்ளார்.
திரு. ராஜசேகரன் அவர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை எழுதி அனுப்பும்படி கேட்டு கொள்கிறோம். Tamil Exim Club 9943826447