உலக அளவில் இந்தியர்கள் குடியமர்ந்த பிறகு கொரியர் சர்வீஸ் தொழில் சூடு பிடிக்க துவங்கியது. ஆந்திராவில் இருந்து சென்ற தம்பிகள் கருடவேகா http://garudavega.com என்ற கம்பெனியை துவங்கி இன்று மிக பெரிய அளவில் தொழிலை உலகம் முழுவதும் நடத்தி வருகிறார்கள்.
ஓம் முருகா குடும்பம் தமிழர்களை தொழில் துறையில் முன்னேற்றுவதில் 2010 முதல் முழு மூச்சுடன் செயல்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. நம் குடும்பத்தை சேர்ந்த நபர் அமெரிக்காவில் கொரியர் சர்வீஸில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து உள்ளார். அதன் அலுவலகத்தை சென்னையில் திறக்க திட்டமிட்டார் நாம் அவரிடம் பரிந்துரைத்தது படித்த தமிழ் தம்பிகள் சுயதொழில் செய்ய விருப்பப்படுவோரை கொண்டு அந்த அலுவலகத்தை அமைப்போம் இதனால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றோம்.
நண்பரும் அதனை ஏற்று தற்பொழுது சென்னையில் அலுவலகம் திறந்து நடத்த விருப்பம் உள்ள தம்பிகளை சந்தித்து பேசிட தயாராக உள்ளார். பிரைவேட் கல்லூரிகளில் பல லட்சங்கள் கொடுத்து பட்டம் படிக்க பணம் உள்ள தம்பிகள் சுயதொழில் செய்ய முதலீடு செய்து பொருள் ஈட்ட தயக்கம் காட்டுவதை தவிர்த்து முன்னுக்கு வரவேண்டும்.
நீங்கள் உங்கள் முதலீட்டில் இந்த அலுவலகத்தை திறந்திட வேண்டும் நண்பர்கள் ஒன்றினைந்தும் இந்த தொழிலை துவக்கலாம். கொரியர் சர்வீஸ் சுய தொழிலில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.தேர்ந்து எடுக்கப்படுவோர் நேரடி சந்திப்புக்கு அழைக்கப்படுவார்கள்.