உலகமெங்கும் ஊறுகாய்!
—————————-
இந்தியாவில் தயாராகும் ஊறுகாய், அதிலும் நம் தமிழகத்தில் தயாராகும் ஊறுகாய்க்கு உலகம் முழுக்கவே நல்ல வரவேற்பு உண்டு.
மாங்காய் ஊறுகாய்க்கே அதிகக் கிராக்கி!
——————————-
“இந்தியாவில் தயாராகும் ஊறுகாய் மற்றும் சட்னி வகைகளுக்கு உலக அளவில் சந்தை வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இங்கிருந்து எலுமிச்சை, மாங்காய், மிளகாய் ஊறுகாய் என பலவகைகளில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த ஊறுகாய் ஏற்றுமதியில் 40 சதவிகிதத்துக்குமேல் மாங்காய் ஊறுகாய்தான்.
இன்றைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, ஊறுகாய்க்கு அதிகச் சந்தை வாய்ப்புகள் உள்ள நாடுகளாக ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், ஐக்கிய அரபு நாடுகள் விளங்குகின்றன. சமீப காலமாக, வெஜிடபிள் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், பச்சை மிளகு ஊறுகாய் போன்ற இன்னும் பலவகையான ஊறுகாய்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
ஏற்றுமதி சந்தைகள் அதிகமுள்ள நாடுகள்!
———————————-
நாடுகள் வாரியாகப் பார்க்கும் போது, இங்கிலாந்தில் வெஜிடபிள் ஊறுகாய் மற்றும் ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் ஊறுகாயையும், ஆஸ்திரேலியா வில் மாங்காய் ஊறுகாய்களையும், ஐக்கிய அரபு நாடுகளில் மீன் ஊறுகாய் களையும் அதிகமாக விரும்புகிறார்கள். ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் ஊறுகாய்க் கான சந்தை வளர்ச்சி அதிகமாகக் காணப்படுகிறது.
ஜப்பான், கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜோர்டான், லிதுவேனியா, போலந்து, சவுதி அரேபியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஊறுகாய்க்கான சந்தைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. பொதுவாக, உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைப்பவர்கள் ஒவ்வொரு நாட்டின் உணவு விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களைத் தெரிந்துவைத்திருப்பது அவசியம். உலக நாடுகள் அனைத்துமே உணவுப் பொருட்கள் வழியாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு நோய்கள் பரவக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறது. அதனால் நாம் அனுப்பும் ஊறுகாயின் தரத்தில் மிகுந்த கவனமும், அதை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோர்களின் மீது அக்கறையும் இருக்க வேண்டியது அவசியம். கடந்த 2016-17-ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகி இருக்கும் ஊறுகாயின் மதிப்பு 1200 கோடி ரூபாய்” என்றனர்.
பிராண்ட் மதிப்பும், தரத்தில் நம்பிக்கையும்!
————————————
வீட்டுச் சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்கள், ஊறுகாய், சாப்பாட்டு மிக்ஸ் என எல்லா விதமான பொருட்களையும் தயாரிக் கிறது ஆச்சி நிறுவனம். இந்த நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் ஏகப் பிரபலம். இந்த நிறுவனத்தின் தலைவர் ஏ.பத்மசிங் ஐசக்கிடம் ஊறுகாய் ஏற்றுமதி பற்றிப் பேசினோம்.
“என் நிறுவனத்தின் பிராண்ட் மீதான மதிப்பும், அதன் தரத்தில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையுமே உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் நிலைபெறச் செய்திருக்கிறது. ஊறுகாய் தயாரிப்பதை ஒருசிலர் சாதாரண விஷயமாக நினைக்கிறார்கள். அப்படிக் கிடையாது, ஊறுகாய் உற்பத்தியிலும் அதிகப்படியான அக்கறை தேவை. புதிதாக ஊறுகாய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் களம் இறங்குபவர்கள் கட்டாயம் அவரவர்களின் பிராண்டுகளை மக்கள் மனதில் நிலைபெறச் செய்யுங்கள். அதற்கான அனைத்து ஈடுபாட்டையும் தாங்கள் உற்பத்தி செய்யும் ஊறுகாயின் தரத்தில் காட்டுங்கள்” என்கிற வழிகாட்டுதலோடு பேசத் தொடங்கியவர், ஏற்றுமதி குறித்த அடிப்படை விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.
“இன்றைய நிலையில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் நம்மவர்களுக்கு இருக்கும் குறைபாடு, அதன் தரத்தைப் பரிசோதிக்க வசதிகள் இல்லாமல் இருப்பதுதான். ஊறுகாயின் தரம், சுவை என எல்லாவற்றையும் பரிசோதித்து ஏற்றுமதி செய்யும்போது, நம் பொருளின் மீதான மதிப்பும், அதன் தேவையும் நாளுக்குநாள் அதிகரிக்கவே செய்யும். சமீபத்தில் எங்கள் நிறுவனம் சென்னை அண்ணா நகரில் சயின்டிஃபிக் ஃபுட் டெஸ்டிங் லேப் (பரிசோதனைக் கூடம்) ஒன்றை அமைத்துள்ளது. இதன்மூலமாக நாங்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு, அதன்பிறகு ஏற்றுமதி செய்யப் படுகிறது. உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள், தங்களின் உணவுப் பொருட்களைப் பரிசோதிக்க விரும்பினால், எங்கள் பரிசோதனைக் கூடத்தைத் தொடர்பு கொள்ளலாம்” என்றவர், புதிய ஏற்றுமதியாளர் களுக்கான சில டிப்ஸ்களையும் தந்தார்.
“ஊறுகாய்களை ஏற்றுமதி செய்யும்போது அவை பெரும்பாலும் கண்ணாடி பாட்டில் களில்தான் அடைக்கப்பட வேண்டும். அப்போது தான் அதன் தரமானது பல மாதங்கள் வரை நீடித்து இருக்கும். எந்தமாதிரியான ஊறுகாய்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்துவைத்துக் கொண்டு, அதன்படி ஏற்றுமதி செய்வது புத்திசாலித்தனம். உதாரணத்துக்கு, இங்கிலாந்தில் மீன்கள் அதிகம் கிடைப்பதில்லை. அதனால் நாங்கள் அந்த நாட்டுக்கு மீன் ஊறுகாய்களை அதிகமாக ஏற்றுமதி செய்கிறோம்.
அசைவ ஊறுகாய்களையும் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே எங்கள் நிறுவனம் ட்வின்பேர்டு என்கிற பெயரில் அசைவ ஊறுகாய்களை ஏற்றுமதி செய்து வருகிறது” என்றார் தெளிவாக.
தரம் நிரந்தரம்!
——————
ஊறுகாயை உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கி அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவரும் ஸ்வாதி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் பாலாஜி சூரிசெட்டியிடம் பேசினோம்.
“1990-களிலிருந்து நான் இந்தியாவில் உற்பத்தி யாகும் பல பொருட்களை வாங்கி ஏற்றுமதி செய்து வருகிறேன். குறிப்பாக, ஊறுகாயைத் தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் லண்டன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். இன்றைய சூழ்நிலையில் வருடத்துக்கு 10 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து வருகிறேன்.
நான் ஊறுகாயை உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கும்போது அதன் தரம் மற்றும் பேக்கிங் மீது அதிகமான கவனத்தைச் செலுத்துவேன். காரணம், தரமாக இருந்தால்தான் நாம் ஏற்றுமதி செய்யும் ஊறுகாயைத் தொடர்ந்து விரும்புவார்கள். பேக்கிங் சரியாக இருந்தால்தான், நாம் ஏற்றுமதி செய்யும் பொருட் களின் தரம் கெடாமல், அதே சுவையுடன் நுகர்வோர்களின் கைகளுக்குச் சென்று சேரும்.
என் ஊறுகாய் ஏற்றுமதியில் லண்டனில் உள்ள ஈஸ்ட்ஹாம் என்கிற ஏரியாவுக்குத்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. என் சொந்த நிறுவனம் ஒன்று அங்கே இருந்து ஏற்றுமதிக்கான வேலைகளைச் செய்வதால், என்னால் அந்த ஏரியாவில் அதிகமான ஆர்டர்களைப் பிடிக்க முடிகிறது.
மேலும், அந்த ஏரியாவில் தென்னிந்திய மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். தரமான பொருள், சரியான நேரத்தில், சரியான மக்களுக்குச் சென்று சேரும்போது கண்டிப்பாக நமது ஏற்றுமதி ஆர்டர்கள் பெருகும்” என்றார்.
ஊறுகாயை யார் வேண்டு மானாலும் தயாரிக்கலாம் என்பதால் பலரும் இந்தத் தொழிலில் இறங்கி லாபம் பார்க்கலாமே!
Via: Nanayavikatan
அயல்நாடுகளில் வேலைசெய்து கொண்டு இருக்கிறீர்களா? புதிய ஏற்றுமதி இறக்குமதி தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா நீங்கள்? முன்னனுபவம் மற்றும் தொழில் உலக தொடர்பு உள்ள நல்லதொரு ஆலோசகரை நியமித்து கொண்டு அவர்களிடம் நேரடியாக நடைமுறை தொழில் பயிற்சியை பெற்று பின்னர் தொழிலை துவங்கலாம். பலர் எந்த ஒரு தொழில் தொடர்பும் இல்லாமல் ஏற்றுமதி இறக்குமதி தொழில் துவங்கி பல்வேறுபட்ட பிரச்சனைகளை சமாளிக்க முடியாமலும் தகுந்த நேரத்தில் தகுந்த முடிவை எடுக்க தெரியாமலும் தொழிலை விட்டு விலகி வழக்கம் போல மாதசம்பள வாழ்கைக்கேய சென்று விடுகிறார்கள்.
ஓம் முருகா நிறுவனர் ராஜன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு நேரடி தொழில் பயிற்சியை வழங்கி வருகிறார். அவருடைய நேரடி தொழில் பயிற்சியின் மூலம் பயனடைந்த தமிழர்கள் தொழில் அதிபர்களாக வாழும் நாடுகள் அமெரிக்கா, ஈகுவடார், பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், சீனா, பிலிப்பைன்ஸ். 25/07/2024 அன்று நேரடி தொழில் பயிச்சி அளிப்பதற்காக ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். உங்கள் பொருள்களை நேரடியாக சந்தைப்படுத்தவும் ராஜன் அவர்களை வாட்சப் மூலம் தொடர்பு கொள்ளலாம். +65 90765060