அரிசி ஏற்றுமதி!

அரிசி ஏற்றுமதி!
————————-
சோளம், கோதுமைக்கு அடுத்து இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் தானியமாக இருக்கிறது நெல். இதிலிருந்தே அரிசி என்கிற உணவுப் பொருள் கிடைக்கிறது. அரிசியில் இரண்டு ரகங்கள் உண்டு. ஒன்று பாஸ்மதி மற்றொன்று பாஸ்மதி அல்லாத அரிசி.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, பாஸ்மதி அல்லாத அரிசி ரகங்களே அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.
வட இந்திய மாநிலங் களில்தான் பாஸ்மதி அரிசி ரகங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் இந்த இரு அரிசி ரகங்களும் உள்நாட்டு தேவை போக, அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதனால் அரிசி ஏற்றுமதிக்கான தொழில் வாய்ப்புகள் நம் நாட்டில் அதிகரித்துக் காணப்படுகின்றன. உலக நாடுகளில் எந்தெந்த நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியாகிறது, தற்போது அதிகமாக ஏற்றுமதியாகும் அரிசி வகை எது என்பதையெல்லாம் இனி பார்க்கலாம்.
இரண்டாவது இடத்தில் இந்தியா!
—————————-
“தற்போது அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலேயே மிகப் பெரிய நாடாக தாய்லாந்து இருந்து வருகிறது. அதற்கு அடுத்து வியட்நாம் அதிகமான அரிசியை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், சமீப காலமாக வியட்நாமில் விளைவிக் கப்படும் அரிசியின் தேவையானது தேசிய சந்தைகளில் குறைந்து காணப்படுவதால், அரிசியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடாக இந்தியா இடம்பிடித்திருக்கிறது.
உலக அளவில் அரிசி உற்பத்தியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பல வருடங்களாக முதலிடத்திலிருந்த தாய்லாந்து நாட்டைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்து, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் மட்டும்தான் வேகவைத்த அரிசி (parboiled rice) ஏற்றுமதி செய்து வருகின்றன. அதேபோல இந்தியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் 100% உடைந்த அரிசிகளை ஏற்றுமதி செய்து வருகின்றன.
ஏற்றுமதி தேவை அதிகரிக்கும்!
பங்களாதேஷ், ஐவரி கோஸ்ட் (மேற்கு ஆப்பிரிக்க நாடு), நைஜீரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, சோமாலியா, ஈரான், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்தியாவின் பாஸ்மதி அல்லாத அரிசிக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. உலக நாடுகளின் அரிசி தேவையானது நாளுக்குநாள் அதிகரித்துக் காணப் படுவதாலும், அரிசி உற்பத்தி செய்யும் நாடுகளிடையே போட்டிகள் நிலவிவருவ தாலும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவுக்கு அரிசி ஏற்றுமதி ஆர்டர் களானது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
அதேபோல, பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதியானது ஒரு வருடத்துக்கு நான்கு மில்லியன் டன்னாகக் காணப்படுகிறது. இது நடப்பு ஆண்டில் ஏழு மில்லியனாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில் இந்திய பாஸ்மதி அரிசியானது ஆப்பிரிக்கச் சந்தையில் ஒரு டன் 400 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது. இது தாய்லாந்து நாட்டு அரிசி விலையைவிட 10-15 அமெரிக்க டாலர்கள் குறைவு. வெள்ளை அரிசி 360-370 டாலர்கள் வரை விலை போகிறது.
நடப்பு ஆண்டில் அரிசி இறக்குமதி நாடான நைஜீரியாவில் பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், அந்த நாட்டின் அரசாங்கமானது உள்நாட்டு மக்களுக்கு அரிசியை விநியோகம் செய்யத் திட்ட மிட்டிருக்கிறது. இதனால் அந்த நாடானது, இந்தியாவிலிருந்து அதிகமாக அரிசியை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனப் பல தகவல்களைச் சொன்னார்கள் அவர்கள்.
பாஸ்மதி அல்லாத அரிசிகளின் ஏற்றுமதி!
=====================
கடந்த 19 ஆண்டுகளாக அரிசி ஏற்றுமதி செய்துவரும் சென்னையைச் சேர்ந்த புளூபாரத் எக்ஸிம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கமாலுதீனிடம், அரிசி ஏற்றுமதியில் உள்ள சாதக, பாதகங்களைக் கேட்டோம். அவர் அனுபவம் இனி…
“பாஸ்மதி அல்லாத அரிசியைப் பொறுத்தவரை, தமிழகத்தைவிட ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் தான் அதிகமாகப் பயிரிடப் படுகிறது. பொன்னி ஸ்டீம் (சோனா மொசூரி - கர்நாடகா பொன்னி), பொன்னி பிபிடி (ஆந்திரா பொன்னி), பொன்னி ரா, பொன்னி ஐஆர்64, ரவுண்ட் ரைஸ், பிரவுன் ரைஸ், இட்லி அரிசி, டபுள் பாய்ல்டு மற்றும் புரோக்கன் ரைஸ் (100%) ஆகிய ஒன்பது வகையான பாஸ்மதி அல்லாத அரிசிகளே தென்னிந்தியாவில் அதிகமாக விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொன்னி ஸ்டீம் அரிசிக்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா, புரூனே மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
பொன்னி பிபிடி மற்றும் பொன்னி ரா அரிசியைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியா, துபாய், இங்கிலாந்து சந்தைகள் பிரபலமானவை. ஐஆர்64 அரிசியானது இலங்கைக்கும், ரவுண்ட் ரைஸ் மற்றும் பிரவுன் ரைஸ் ஆகியவை வளைகுடா நாடுகளுக்கு மட்டும், அதிலும் தென்னிந்திய மக்கள் அதிகம் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல டபிள் பாயில் ரைஸ் மற்றும் புரோக்கன் ரைஸ் ஆகிய இரண்டும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதி விலை ஒரு டன்னுக்கு 475-645 அமெரிக்க டாலர் வரை வர்த்தகமாகிறது. தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதால், விலையும் சற்று உயரலாம்.
மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்யுங்கள்!
——————————-
அரிசி ஏற்றுமதியைப் பொறுத்தவரை, காரிஃப் பருவத்தைப் பொறுத்து விலை யானது மாறுபடும். நாங்கள் முதலில் பொன்னி அரிசியை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தினோம். அதன்பிறகு அந்த நாட்டு மக்கள் அதை அதிகம் விரும்பிச் சாப்பிட ஆரம்பித்தார்கள். இதனால் எங்களுக்கான சந்தை வாய்ப்பு அங்கே அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றைய நிலையில் மாதத்துக்கு 300-400 டன்கள் வரை ஏற்றுமதி செய்கிறோம். இதே ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக, மாதத்துக்கு 500 டன்வரை ஏற்றுமதி செய்தோம்.
சந்தையிலிருந்து அரிசியை வாங்கியதும் அதை அப்படியே ஏற்றுமதி செய்யக்கூடாது. அதைச் சுத்தம் செய்து மேலும் மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்யவேண்டியது அவசியம். எங்களது நிறுவனத் திலிருந்து, முதல் தரமுள்ள அரிசிகள் பாரத் பொன்னி ரைஸ் என்கிற பிராண்ட் பெயரிலும், இரண்டாம் தரமுள்ள (இதைத் தரம் குறைந்த அரிசி என்று எடுத்துக்கொள்ளக் கூடாது; இவற்றுள் உடைந்த அரிசிகள் அதிக அளவில் இருக்கும்) அரிசி புளூ ஆப்பிள் என்கிற பெயரிலும் ஏற்றுமதியாகின்றன.
பரிசோதித்த பின் ஏற்றுமதி!
=====================
ஏற்றுமதி செய்யும் அரிசியைப் பொறுத்தவரை, தரம் மிக மிக முக்கியமாகும். ஏற்றுமதியாளர்கள் சந்தையிலிருந்து வாங்கும் அரிசிகளை சமைத்துப் பார்த்து சாப்பிட்ட பின்பு, அதில் திருப்தி இருந்தால் ஏற்றுமதி செய்யலாம். இந்த முறையைத்தான் நான் கையாண்டு வருகிறேன். காரணம், செய்யும் தொழிலில் நாம் முதலில் திருப்தியடைய வேண்டும், அப்போது தான் வெளிநாட்டு வர்த்தகர்களுடன் நீண்டகால உறவானது தொடரும். ஏற்றுமதி தொழிலும் சிறக்கும்” என்றவர், முக்கியமாகக் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை எடுத்துச் சொன்னார்.
கவனிக்க வேண்டியவை!
===================
ஏற்றுமதியாகும் பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசிகள் எதுவாக இருந்தாலும் அவற்றுள் ஈரப்பதமானது 12% இருக்கலாம். அதேபோல, பொன்னி அரிசியைப் பொறுத்தவரை, இறக்குமதி யாளர்கள் எதிர்பார்க்கும் அரிசி அளவு 4-5 மில்லி மீட்டர். பாஸ்மதி அரிசியைப் பொறுத்த வரை, 7-8 மில்லி மீட்டர் அளவே இறக்குமதியாளர்கள் அதிகம் கேட்கிறார்கள். அரிசியின் நிறத்தில் சிவப்பு, மஞ்சள், செக்கி கலர், கெர்னல் (முதிர்வுக்கு முந்தைய நிலை) ஆகியவையும் 0.25 சதவிகிதம்தான் இருக்க வேண்டும் என்பது இறக்குமதியாளர்களின் எதிர்பார்ப்பு. உடைந்த நிலையில் உள்ள அரிசிகளின் கலவையானது 2-3 சதவிகிதமும், நெல், உமி மற்றும் தவிடு போன்ற தேவையற்ற பொருட்கள் முற்றிலும் இருக்கக் கூடாது என்பதும் அவசியமாகும்.
பெரும்பாலான இறக்குமதியாளர்கள், ஆர்டர் தரும் அரிசிகளை பேக்கிங் செய்தே அனுப்பச் சொல்வார்கள். அதனால், அரிசிகளை பேக்கிங் செய்வதிலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது ஏற்றுமதியாளர்களின் கடமையாகும். எங்களிடம் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள் 20 கிலோ என்கிற அளவில் பேக்கிங் செய்து அனுப்பச் சொல்வார்கள். சிங்கப்பூர், புரூனே ஆகிய நாட்டின் இறக்குமதியாளர்களில் பெரும்பாலானவர்கள் 25 மற்றும் 5 கிலோக்களாக பேக்கிங் செய்து அனுப்பச் சொல்கிறார்கள். அரிசி ஏற்றுமதியைப் பொறுத்தவரை, இந்திய அரசாங்கம் தரும் பைட்டோசானிட்டரி சான்றிதழ் (Phytosanitary Certificate) மற்றும் தனியார் அமைப்பு வழங்கும் ஃப்யூமிகேஷன் சான்றிதழ் (Fumigation Certificate) ஆகிய இரண்டும் அவசியம். சில இறக்குமதி நாடுகள், ஏற்றுமதியாளர்களின் நாட்டில் இருந்து வழங்கும் சான்றிதழ்களையும் கேட்கின்றனா்’’என்றார்.
கடன் வியாபாரம் வேண்டாம்!
======================
சென்னையைச் சேர்ந்த அரிசி ஏற்றுமதியாளர் களில் ஒருவரான கவி எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் இம்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பி.ஏகாம்பரத்துடன் பேசியபோது, அரிசி ஏற்றுமதி செய்யும்போது கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி சொன்னார்.
‘‘காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நான் பல ஆண்டு களுக்கு முன்பே தொழில் ரீதியாக கனடாவுக்குச் சென்றுவிட்டேன். அங்கிருந்து கொண்டு பத்து ஆண்டுக்கும் மேலாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் தொழிலை செய்துவந்தேன். அப்போது பல இறக்குமதியாளர்களுடன் எனக்கு நல்ல தொடர்பிருந்தது. சொந்த நாட்டுக்குத் திரும்பிவந்த பிறகு இங்கிருந்து அதே தொழிலை செய்யலாம் என்று நினைத்தபோது, அரிசி ஏற்றுமதியைச் செய்யலாமே என்று ஆரம்பித்தேன்.
இன்றைய நிலையில் மாதம் மூன்று முதல் நான்கு கன்டெய்னர் அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறேன். அரிசி மட்டுமல்லாமல், அரிசி சார்ந்த வறுத்த மாவு, வறுக்காத மாவு போன்ற சில பொருட்களையும் ஏற்றுமதி செய்துவருகிறேன்.
எனக்கான சந்தைவாய்ப்பு அதிகமாக உள்ள நாடு இங்கிலாந்து. மேலும், ஐரோப்பிய நாடுகள், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்துவருகிறேன்.
புதிய ஏற்றுமதியாளர்களுக்கு நான் சொல்லிக் கொள்ளும் ஒரே விஷயம், இறக்குமதியாளர்களைப் பிடிப்பதில் அதிக அக்கறையும், முயற்சியும் எடுத்துக்கொள்ளுங்கள்.இறக்குமதியாளர்கள் ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்த பிறகு அவர்களின் உறவானது தொடர்ந்து நிலைபெற தேவையான அனைத்தையும் அவர்களுக்குச் செய்துகொடுங்கள்.
அதேபோல, பொருட்களைத் தாருங்கள்; பணத்தைப் பிறகு தருகிறேன் என்கிற பேச்சுக்களுக்கு ஏற்றுமதி யாளர்கள் இடம் தரவே கூடாது. அதுபோன்ற வியாபாரத்தை அறவே தவிர்த்துவிடுதல் நலம்” என்றார்.
இன்றைய நிலையில் பாஸ்மதி அரிசியின் உற்பத்தி குறைவு என்பதாலும், உலக நாடுகளில் இதற்கான தேவை அதிகரித்துக் காணப்படுவதாலும் ஏற்றுமதி யாகும் பாஸ்மதி அரிசிக்கு விலையானது அதிகரித்துக் காணப்படுகிறது. அதனாலேயே இந்தியாவில் உற்பத்தியாகும் பாஸ்மதி அரிசியில் மூன்றில் இரண்டு பங்கு ஏற்றுமதி ஆகிறது.

அயல்நாடுகளில் வேலைசெய்து கொண்டு இருக்கிறீர்களா? புதிய ஏற்றுமதி இறக்குமதி தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா நீங்கள்? முன்னனுபவம் மற்றும் தொழில் உலக தொடர்பு உள்ள நல்லதொரு ஆலோசகரை நியமித்து கொண்டு அவர்களிடம் நேரடியாக நடைமுறை தொழில் பயிற்சியை பெற்று பின்னர் தொழிலை துவங்கலாம். பலர் எந்த ஒரு தொழில் தொடர்பும் இல்லாமல் ஏற்றுமதி இறக்குமதி தொழில் துவங்கி பல்வேறுபட்ட பிரச்சனைகளை சமாளிக்க முடியாமலும் தகுந்த நேரத்தில் தகுந்த முடிவை எடுக்க தெரியாமலும் தொழிலை விட்டு விலகி வழக்கம் போல மாதசம்பள வாழ்கைக்கேய சென்று விடுகிறார்கள்.

ஓம் முருகா நிறுவனர் ராஜன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு நேரடி தொழில் பயிற்சியை வழங்கி வருகிறார். அவருடைய நேரடி தொழில் பயிற்சியின் மூலம் பயனடைந்த தமிழர்கள் தொழில் அதிபர்களாக வாழும் நாடுகள் அமெரிக்கா, ஈகுவடார், பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், சீனா, பிலிப்பைன்ஸ். 25/07/2024 அன்று நேரடி தொழில் பயிச்சி அளிப்பதற்காக ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். உங்கள் பொருள்களை நேரடியாக சந்தைப்படுத்தவும் ராஜன் அவர்களை வாட்சப் மூலம் தொடர்பு கொள்ளலாம். +65 90765060

1 Comment

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s