எறும்புகள் அரித்த உணவு பண்டங்களை தமிழர்களின் கடையில் வைத்து விற்று ஆஸ்திரேலிய நாட்டையும் குப்பை கூடமாக மாற்றுகிறார்கள்.
ஆஸ்திரேலியால இருக்கிற ஒரு இந்திய வம்சாவளி பஞ்சாபி ரேடியோ மெல்போர்ன் நகரத்துல இருக்கிற தமிழர்களோட கடைகளை சோதனையிட்டு அங்கு இருந்த காலாவதி ஆன கெட்டுப்போன பொருள்களை படமெடுத்து சிலவற்றை வாங்கி சோதனைகளுக்கு அனுப்பி அதன் முடிவுகளை வெளியிட்டு. தமிழர்கள் கடைகளை இழுத்து மூடும் அளவுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.
இதனால் அவர்களுக்கு என்ன பயன்? என்றால் அவர்கள் சார்ந்த பஞ்சாபி சமூகம் இந்த தொழில் துறையை கையில் எடுக்க போடும் நாடகமாக இதை நான் கருதுகிறேன். அவர்கள் குறிப்பிட்டு உள்ள பொருள்கள் வடநாட்டு பொருள்கள் தான் நமது கண்ணுக்கு அவர்கள் வடநாட்டு பொருளைத்தானே குற்றம் சொல்கிறார்கள் தமிழ் நாட்டு பொருளை அல்ல என தோன்றும்.
சில சதிவேலைகளை மூடி மறைத்து செய்வதால் தமிழர்களின் அடித்தளத்தை ஆட்டம் காண செய்து ஓட்டம் எடுக்க செய்யலாம் என உலகம் முழுவதும் வித்தை கற்று வைத்து இருக்கிறார்கள். அதை போல நம்மவர்களுக்கு தங்கள் தவறுகளை தாங்களே சரிசெய்து கொள்ள முயற்சிக்க வேண்டும் இப்படி நீங்கள் நடத்தும் கடைகளில் உள்ள பொருள்கள் கெட்டுபோனவையாக இருந்தால் உங்களுக்கு அரசு அனுமதி மறுத்து சுயதொழில் செய்யமுடியாமல் போகும்.
இந்திய மசாலாவில் மிக பிரலபமான MDH என்ற பிராண்டில் பூச்சிமருந்து அதிகம் உள்ளது
பல பொருள்களில் தயார் செய்த தேதி மாதம் ஏன் வருடங்களை கூட திருத்தி விற்பனை செய்திடும் தமிழர்கள் கடைகளை பார்க்கத்தான் முடிகிறது. தமிழர்களால் ஆஸ்திரேலியா நாட்டுக்கு பல கேடுகள் காத்து கொண்டு இருக்கிறது என்று முடிக்கிறார்கள் அந்த கட்டுரையில்.
இப்படி அத்தி பூத்தாற்போல் ஒரு சில தொழிலை செய்து கொண்டிருக்கும் தமிழர்களை ஒழித்து கட்ட உலகம் முழுவதும் சதிவேலை நடக்கிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு தவறுகள் இருந்தால் திருத்திக்கொண்டு மற்றவர்களையும் திருந்த செய்து சமூக பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்போம்.
உங்கள் சகோதரன்
C. ராஜன் MBA
தொழில் ஆலோசகர்
ஓம் முருகா முகநூல் சிங்கப்பூர் நிறுவனர்
தொடர்புக்கு வாட்சப் +6590765060
மின்னஞ்சல் : tamilembassy@gmail.com
தமிழ் வாடிக்கையாளர்கள் தமக்குத் தேவையான பொருட்களை தமிழர்கள் நடத்தும் கடைகளில் இருந்து வாங்க வேண்டும் என்று உறுதியுடன் இருக்க வேண்டும்.
கடைகள் நடத்தும் தமிழர்கள், தங்கள் கடைகளில் விற்கும் பொருட்களை தமிழர்களிடமிருந்து, (அதாவது தமிழர்கள் தயாரிப்பு அல்லது தமிழர்கள் இறக்குமதி செய்யும் பொருட்கள்) வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.