தமிழகத்தில் ஏற்றுமதி தொழில் என்ற விழிப்புணர்வை பலர் தொலைகாட்சிவழிகளில், நேரடி ஏற்றுமதி பயிற்சி வகுப்புகளில் கொடுத்து வந்தாலும் அவர்கள் கூறுவது போல அயல்நாட்டில் இருந்து முன் பணம் அனுப்பி யாரும் இறக்குமதி செய்வது இல்லை, அல்லது தாங்கள் வாங்கும் சில லட்சம் ரூபாய்களுக்கு எள்.சி திறக்கவும் இறக்குமதியார் விரும்புவதும் இல்லை, தொழில் முதலீடு என்பது லைசன் வாங்குவதுடன் முடிந்து விடுவது அல்ல நேரடியாக அயல்நாட்டு பயணங்களை மேற்கொண்டு ஏற்றுமதியாளர்களை இறக்குமதியாளர்களை நேரடியாக சந்தித்து நல்ல புரிதலுடன் நீங்கள் தொழிலை துவங்கினால் வெற்றி நிச்சயம்.
பல ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே ஏற்றுமதி ஆர்டருக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் அந்த சகோதர சகோதரிகளுக்கு இன்னும் நீங்கள் தேடிப்பார்க்க வேண்டிய சில பிசினஸ் டு பிசினஸ் வெப் சைட் லிங்க் தருகிறேன். இத்தனையும் மிச்சம் வைக்காமல் செலவு செய்யாமல் ஏற்றுமதி ஆர்டர் பெற தேடி மகிழ்வீர்களாக… வணக்கம்.