1). அயல்நாட்டில் இருந்து தங்கம் டூட்டி கட்டமால் இந்திய பயணிகள் என்ன அளவு வரை கொண்டுவரலாம்?
1 வருடத்திற்கு மேல் வெளிநாட்டில் தங்கி இருந்து வரும் இந்திய பயணி டூட்டி கட்டாமல் கொண்டு வர அனுமதிக்கப்படும் தங்கம் ஆண்கள் 20 கிராம் = ரூ 50000 மதிப்பு வரை, பெண்கள் 40 கிராம் = ரூ. 1,00,000 மதிப்பு வரை.
2). குழந்தைகளுக்கு மேற்குறிப்பிட்ட அலவன்ஸ் செல்லுமா?
1 வருடத்திற்கு மேல் அயல்நாட்டில் தங்கி இருந்து வரும் குழந்தைகளுக்கு டூட்டி இல்லாத அலவன்ஸ் பொருந்தும்.
3). டூட்டி அலவசன்ஸில் தங்க காசு பிஸ்கட் கொண்டு வரலாமா?
முடியாது, நகைகள் மட்டும் கொண்டு வரலாம். தங்கம் வேறு வடிவத்தில் கொண்டு வந்தால் டூட்டி கட்ட வேண்டும்.
4). டூட்டி பிரீ அலவன்ஸ் தாண்டி அதிகமாக கொண்டு வரும் தங்கத்திற்கு கஸ்டம்ஸ் டூட்டி எவ்வளவு?
6 மாதத்திற்கு மேல் அயல்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு டூட்டி 10.3%.
5). இந்திய கஸ்டம்ஸில் தங்க விலையை எவ்வாறு நிர்ணயம் செய்கிறார்கள்? நகை வாங்கிய ரசீதை காண்பித்தால் போதுமா?
நீங்கள் பயணம் செய்யும் நாளில் இந்திய அரசு தங்கத்தின் மீது நிர்ணயித்து உள்ள விலையை கஸ்டம்ஸ் அதிகாரி கணக்கில் எடுத்துக்கொள்வார்.
6). அலவன்சுக்கு மேல் எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?
இந்தியபாஸ்போர்ட் உள்ளவர் 6 மாதம் மேல் அயல்நாட்டில் தங்கி இருந்தவர் 1 கிலோ வரை வரி கட்டி தங்கம் கொண்டுவரலாம். ( நகையாக, ரா தங்கமாகவோ, தங்க காசாகவோ, பிஸ்கட்டாகவோ கொண்டுவரலாம்.
7). 6 மாத காலத்தில் 1 சில முறை இந்த வந்து சென்று உள்ளேன் நான் தங்கம் கொண்டு வரலாமா?
6 மாத கணக்கில் சிறு விடுமுறையில் இந்தியா வந்து தங்கி சென்ற நாட்கள் தொடர்ந்து 30 நாட்கள் மிகாமல் இருக்க வேண்டும் ( ஒவ்வொரு முறையும் ).
8). 6 மாதம் அயல்நாட்டில் தங்காத பயணிகள் எவ்வளவு டூட்டி கட்ட வேண்டும்?
கையில் கொண்டு வரும் தங்கத்திற்கு 36.05% டூட்டி கட்ட வேண்டும்.
9). 80 கிராம் தங்கம் வெளிநாடு கொண்டு சென்று மீண்டும் கொண்டு வரும் பொழுது கஸ்டமசால் ஏதும் பிரச்சனை இருக்குமா?
இந்தியாவில் வாங்கிய நகைகளுடன் வெளிநாடு செல்கையில் ஏர்போர்ட்டில் உள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் “எக்ஸ்போர்ட் சர்டிபிகேட்” பெற்று செல்ல வேண்டும்.
10). எக்ஸ்போர்ட் சர்டிபிகேட் எவ்வாறு பெறுவது?
பயணியின் பெயர், பாஸ்போர்ட் நம்பர், தங்கத்தின் விபரம், எடை போன்றவற்றை குறிப்பிட்டு உருக்கும். இந்தியாவில் விலை மதிப்பு உள்ள பொருள்களை கொண்டு செல்லும் பொழுது எக்ஸ்போர்ட் சர்டிபிகேட் பெற்றுக்கொண்டு சென்று மீண்டும் நாடு திரும்புகையில் பிரச்சனை இல்லை.
ஒரு முறை ஏற்றுமதி செர்டிபிகேட் பெற்றுவிட்டால் அந்த பொருளை கொண்டு செல்லவும் கொண்டு வரவும் 3 வருடங்கள் வரை அனுமதி உண்டு. ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்கள் அந்த சர்டிபிகேட்டை உபயோக படுத்தி கொள்ளலாம்.
நீங்கள் அப்பிளிக்கேஷன் பெற்று அதனை நிரப்ப வேண்டும். நீங்கள் வாங்கிய ரசீது அல்லது பொருள் மதிப்பீடு ரசீது ( அங்கீகரிக்கப்பட்ட டெஸ்ட் சென்டர் கொடுத்தது) இவற்றுடன் அந்த பொருளையும் கஸ்டம்ஸ் அதிகாகிகள் சோதனையிட கையில் தயாராக வைத்து இருக்க வேண்டும். போர்டிங் பாஸ் மற்றும் பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.
நீங்கள் பயணிக்கும் விமான நிலையத்திற்கு சற்று முன்கூட்டியே சென்று விதிமுறைகளை மறுசோதனை செய்து கொள்ளவும். வெவ்வேறு விமான நிலையங்களுக்கு முறைகள் மாறுபட வாய்ப்பு உண்டு.
11). கல் நகைகளுக்கு டூட்டி கஸ்டம்ஸ் அலவன்ஸ் கிடைக்குமா?
கல் நகைகளுக்கு கிடையாது.
12). நாமே சுயமாக கஸ்டம்ஸிடம் சென்று வரி கட்ட வேண்டுமா? கஸ்டம்ஸ் கவனிக்காத பட்சத்தில்.
அளவுக்கு அதிகம் தங்கம் இருக்கும் பட்சத்தில் சுயமாக தெரிவிப்பது நல்லது. அவர்கள் சோதனை செய்து கண்டுபிடித்தால் நகைகளை ஜப்தி செய்யவோ, அபராதம் விதிக்கவோ, கைது செய்யவோ வாய்ப்பு உண்டு.
13). எனது அயல்நாட்டு விசாவை கேன்சல் செய்து வரும் பொழுது. ( பி ஆர், ஒர்க் பெர்மிட்) ஏதும் கூடுதல் அலவன்ஸ் உண்டா?
கிடையாது.
14). பயணம் செல்லும் பொழுது தங்கத்தை அவசியம் கையுடன் கொண்டு வரவேண்டுமா?
கையோடு கொண்டு வரலாம், அல்லது பயணம் செய்த 15 நாட்களுக்குள் தனியாக வரும் லக்கேய்ஜில் கொண்டு வரலாம். அந்த பயணி அனுமதிக்கப்பட்ட அளவு தங்கத்தை கஸ்டம்ஸ் வேற்கவுசில் உள்ள எஸ் பி ஐ அல்லது மெட்டல் மினரல் காற்பரெய்சன் இருந்து பெறவும்.
15). டூட்டி கட்ட பணம் இல்லை என்றால் என்ன செய்யலாம்?
பயணி கொண்டு வந்த நகை பற்றி முழு விபரம் தெரிவிக்காவிட்டாலும் டூட்டி கட்ட பணம் இல்லா விட்டாலும் கால அவகாசம் கொடுத்து டூடியை கட்டிய பிறகு நகைகளை கஸ்டம்ஸ் ஒப்படைக்கும். அல்லது மீண்டும் வெளிநாடு போகும் பொழுது நகைகளை பெற்று செல்ல அனுமதி அளிக்கும்.
மொத்தமாக தங்கம் விற்க வாங்க அணுகவும் ஓம் ஜிவல்லரி.
தங்க வைர நகைகள் ஆர்டரின் பெயரில் செய்து தரப்படும்.
https://www.facebook.com/Om-Jewellery-596667520501261/
WhatsApp +919943826447, Mobile: +919787097448
( மற்றவருக்கு பயனுள்ள தகவல் என்று நீங்கள் கருதினால் தாராளமாக உங்கள் முகநூலில் ஷேர் செய்யலாம் ).