பார்சல் மூலம் போஸ்டல் வழியாக ஏற்றுமதி செய்வது எப்படி?

 

post_office_jpg_1389108g (1)ஏற்றுமதியை ஊக்குவிக்க போஸ்டல் வழியில் ஏற்றுமதி செய்வது அனுமதிக்கப்படுகிறது. இந்திய போஸ்டல் துறை தொடர்புடைய அனைத்து நாடுகளுக்கும் மற்றும் வணிக தடை செய்யப்பட்ட நாடுகளை தவிர மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

தடை செய்யப்பட்ட பொருள்கள்:

————————————-
வன விலங்குகள் அதனுடைய உடல் பாகங்கள் தோள்கள்.
புராதன பொருள்கள், ஆயுதங்கள், வெடிக்கக்கூடிய, தீப்பற்ற கூடிய பொருள்கள், மாந்திரீகம் சம்பந்தமான பொருள்கள் அவற்றை கொண்டு விளம்பர படுத்திய பொருள்களை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது இல்லை.

அதேபோல இந்திய பண நோட்டுகள், வெளிநாட்டு பணங்கள், வாங்கி டிராப்ட், செக், தேசிய சேமிப்பு சர்டிபிகேட், கடன் பாத்திரங்கள் போன்றவை தகுந்த ஆர் பி ஐ அனுமதி கடிதம் அல்லது வெளிநாட்டு செலவாணி மாற்றிக்கொடுக்கும் ஏஜெண்டின் லெட்டெர் இருக்க வேண்டும். மேலும் தகவல் வேண்டுவோர் போஸ்ட்டாபீஸ் மூலம் கேட்டு பெறவும்.

வியாபாரத்தை சாம்பிள் / வியாபார பொருள்கள்:
——————————–
அந்நிய செலவாணி கைமாறாத முறை: அன்பளிப்புக்கள் / வியாபார முன் மாதிரி சாம்பிள்கள்.
அந்நிய செலவாணி கைமாறும் முறை: வியாபார பொருள்கள்.
வியாபார பொருள்கள்:
————————
1. ஜிவல்லரி தவிர மற்ற கஸ்டம்ஸ் டூட்டி டிரா பாக் கிடைக்காத பொருள்கள்.
2. ஜிவல்லரி ஐட்டம்
3. டூட்டி டிரா பாக் மற்றும் எக்ஸைஸ் ரிபேட் கிடைக்க கூடிய பொருள்கள்.
4. சிலநேரங்களில் பொருளை வெளிநாடுகளுக்கு அனுப்பி ரிப்பேர் செய்து மீண்டும் வாங்க கூடிய தேவைக்கும் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
1. ஜிவல்லரி ஏற்றுமதி:
———————-
நகை, விலை மதிப்பில்லா கற்கள் இருக்கும் பாக்ஸை கஸ்டம்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் வைத்து மூடி சீல் வைக்க வேண்டும். வியாபார சாம்பிள் அனுப்பும் பொழுதும் இதே நடைமுறையை நாம் செய்யவேண்டும். சுங்கத்துறையால் விண்ணப்ப படிவத்தில் கையொப்பமிட்டு அனுமதி அளித்து இருக்க வேண்டும். சுங்கத்துறை இல்லாத இடைத்த்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு அருகில் உள்ள அனுமதி பெற்ற அந்நிய பணம் மாற்றும் ஏஜென்டிடம் அந்த பொருளின் மதிப்பை குறிப்பிட்டு லெட்டெர் வாங்கி வந்தால் போஸ்ட் ஆபிசர் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிப்பார்கள்.
டிராபாக் அல்லது எக்ஸைஸ் சம்மந்தமான பொருள்கள்:
———————————-
 கஸ்டம்ஸில் இருந்து அனுமதி பெற்ற கஸ்டம்ஸ் டிரா பாக்பொருள்களை “போஸ்டல்” மூலம் ஏற்றுமதி செய்யலாம். புஸ்தகங்கள் போன்றவை ஏற்றுமதி செய்ய புக் போஸ்டல் மூலம் அனுப்பலாம். அனுமதி பெற உங்கள் அருகாமையில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். உங்கள் பகுதி எல்லைக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் அவர்களை நம் பொருள்களை பரிசோதிக்க அனுமதி அளிக்கவேண்டும்.
விண்ணப்பம் FORM D/ARE-1/2  பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதிகமான பொருள்கள் இருந்தால் நமது கூடோனுக்கு சுங்க அதிகாரிகள் வந்திருந்த்து. எக்ஸைஸ் போர்ட் மூலம் எளிதாக அன்றே ARE-1/2 விண்ணப்பம் செய்து அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
போஸ்ட் ஆபிசில் புக்கிங்
———————————
நீங்கள் புக்கிங் செய்த பொருள்கள் தலைநகரங்களில் உள்ள தலைமை போஸ்ட் ஆபிஸ் மூலமாக தான் ஏற்றுமதி செய்யபடும். ஏற்றுமதி செய்யும் பார்சலில் இருக்க வேண்டிய முக்கியமான டாகுமெண்ட்.பி பி பார்ம்: ஏற்றுமதியாளர் வாங்கி, கஸ்டம்ஸ் கையொப்பம் இடும்.
எக்ஸ்போர்ட் லைசன்ஸ்,
பார்ம் டி: டூட்டி டிரா பாக் உள்ள பொருள்களுக்கு இருக்கவேண்டும்.
ஏ ஆர் ஈ – 1/2 : எக்ஸைஸ் பாண்ட் உள்ள / ரிபேட் கிடைக்க கூடிய.
இன்சூரன்ஸ்
டூட்டி கட்ட தேவை இல்லை என்ற சர்டிபிகேட்
கமர்சியல் இன்வாய்ஸ்
பாக்கிங் லிஸ்ட்
சொந்த அட்ரஸ் எழுதிய ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட கவர்.

எடை, அளவு, பாக்கிங்

தரைவழி பார்சல்:
————————
அனைத்து நாடுகளுக்கும் 10 கிலோ எடை வரை அனுப்பலாம். 20 கிலோ வரை அனுப்ப கூடிய நாடுகளின் பெயர் பட்டியலை உங்களுக்கு அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் மூலம் கேட்டு பெறுங்கள்.

கடல்வழியில் பார்சல்:
——————–
அன்பளிப்பு பார்சல் கூட கடல் வழியில் அனுப்பி வைக்கலாம்.

வான்வெளியில் பார்சல்:
————————–
அனைத்து நாடுகளுக்கும் 20 கிலோ வரை அனுப்ப முடியும் சில நாடுகளை தவிர லிபனான், மார்சல் ஐலாண்ட், நேபாள், புருடோ ரிக்கோ, போன்ற நாடுகளுக்கு 5 கிலோ வரை தான் அனுப்ப முடியும். தாய்வானில் உள்ள குய் மே போன்ற இடங்களுக்கு 3 கிலோ வரை தான் அனுமதி உண்டு,.

பார்சல் இருக்கவேண்டிய அளவு:
——————————
பார்சல் ஒரு மீட்டர் வரை இருக்கலாம். (100 சென்டி மீட்டர்)
ஒரு பார்சல் குறைந்தது 9 சென்டி மீட்டர் * 14 சென்டி மீட்டர் வரை இருக்கலாம்.

போஸ்டல் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு ஏற்றுமதி வியாபாரத்திற்கு நேரடி பயிற்சி பெற விரும்புபவர்கள். புக்கிங் செய்து தொழில் ஆலோசனைக்கு நேரடியாக வரலாம். கடந்த 10 வருடங்களாக பார்சல் தொழில் அனுபவம் பெற்ற ஓம் முருகா முகநூல் தொடர்பில் உள்ள சகோதரர் பயிற்சியை வழங்குகிறார்.

குறைந்த முதலீட்டுடன் தொழில் செய்ய உகந்த முறை போஸ்டல் ஏற்றுமதி தொழில்.

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s