வெற்றிகரமான ஏற்றுமதி நிறுவனத்திற்கு இரண்டு தன்மைகள் இருக்க வேண்டும்.
1. ஏற்றுமதி செய்வதற்கான தயார்நிலை. ( பொருள், விலை, தரம்)
2. நிதி தேவையை முன்கூட்டி திட்டமிடுதல், திட்டமிட்டபடி நிதியை பயன்படுத்தும் திறமை.
ஏற்றுமதி தொழிலுக்கு தேவைப்படும் அடிப்படை செலவுகள்:
———————————————-
அ). பதிவுசெய்தல்:
———————
கம்பெனி பெயர் பதிவு முதல் ஐ ஈ கோடு வாங்கும் வரை மொத்த ஒரு முறை செலவுக்கு தேவை ரூ.10000
ஆ). வெப்சைட் / ப்ரவுசர்:
————————-
தரமான வெப்சைட் மற்றும் ப்ரவுசர் ( கம்பனியை பற்றிய விரிவுரை) செய்ய ஆகும் செலவு ரூ. 100000
இ). மார்கெட் என்ட்ரி செலவு:
——————————
டார்கெட் மார்கெட்டுக்கு பயணம் மேற்கொள்வது.
மார்கெட் என்ட்ரி ஆலோசகர்களை பயன்படுத்துவது.
சீரியசான இறக்குமதியாளர்களுக்கு சாம்பிள்கள் அனுப்புவது.
தொழில் தொடர்பு வெப்சைட் உறுபினர்களாக பதிவு செய்வது.
உங்கள் பட்ஜெட் குறைவாக உள்ள சமயத்தில் தொழில் தொடர்பு வெப்சைட்களை பயன்படுத்தி ஆர்டர் எடுக்க முயற்சி செய்யுங்கள். ( ஏமாற்று பேர்வழிகள் அதில் அதிகம் கவனம் தேவை).
உ). ஏற்றுமதி மேனேஜர்:
—————————-
ஏற்றுமதி மேனேஜர் என்பவர் உங்களின் இனைப்பு பாலம் போன்றவர், உங்கள் நிறுவனத்திற்கும் மற்ற சர்வீஸ் ப்ரோவைடர்களுக்கும் இனைப்பை ஏற்படுத்துவார், வங்கிகள், ப்ரைட் பார்வர்டிங்க் கம்பனிகளுக்கு, கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜெண்டுகள் இவர்களுடன் தொடர்பில் இருந்து நேரத்தில் வேலைகளை முடித்து கொடுப்பார்.
நீங்கள் தொழிலுக்கு ஒதுக்கும் பட்ஜெட் கம்மியாக இருக்கும் பட்சத்தில் பகுதி நேரமாக ஒரு ஏற்றுமதி மனேஜரை பணிக்கமர்த்தி கொள்ளலாம்.
ஊ). வொர்கிங் கேபிடல் ( மூலதன முதலீடு)
————————————
தொழிலை செய்ய மூலதன முதலீடு மிகவும் அவசியம், வங்கிகள் உங்களுக்கு முதலீடுகளை கொடுத்து உதவ பல சலுகை அடிப்படியில் கடன்களை வழங்குகிறது. ஏற்றுமதி மேனேஜர் உங்களுக்கு கடன்கள் கிடைக்க வேண்டிய உதவியை செய்வார்.
——————————
திறமையான பகுதி நேர ஏற்றுமதி மேனேஜர்கள் உள்ளனர் மாத சம்பளம் ரூ.7500 ஆகும். உங்களுக்கு வேண்டிய அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்து விடுவார்கள். உங்கள் ஏற்றுமதி நிறுவனத்திற்கு பகுதி நேர ஏற்றுமதி மேனேஜர் தேவைபட்டால் ஈமெயில் tamilembassy@gmail.com அல்லது வாட்ஸ் அப் +919943826447 செய்யவும்.