புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, மாங்காடு, அணவயல், கீழாத்தூர், புள்ளான்விடுதி, கொத்தமங்கலம்,கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நெல்,வாழை,கரும்பு,சோளம்,கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தன.
ஆலங்குடி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் 3 மாத கால சாகுபடியான ஏற்றுமதி செய்யப்படும் வெள்ளரி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவ்வகை வெள்ளரியை அமெரிக்கா,ஆஸ்திரேலியா,நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இணை உணவாக பயன்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது.இதனால் இந்தியாவில் இருந்து அதிகளவில் இவ்வகை வௌ்ளரி ஏற்றுமதி செய்யப்படுவதாக ஏற்றுமதி நிறுவனங்கள் கூறுகின்றனர். இதனால் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல்,பெங்களூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் ஆலங்குடி பகுதியில் விளையும் இவ்வகை வெள்ளரியை நேரடியாகவும், இடைத்தரகர்கள் மூலமாகவும் விவசாயிகள் இடத்திற்கே வந்து வாங்கிச் செல்கின்றனர்.
இப்பகுதியில் விளையும் வெள்ளரியை நான்கு ரகங்களாக பிரித்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.நாம் உண்ணும் வெள்ளரியை போல பெரியதாக வளர விடாமல் கை விரல் அளவு முதல் ரகம் இதை விட பெரிதாக செல்ல செல்ல 2,3,4 என்று தரம் பிரித்து விலை நிர்ணயித்துள்ளனர்.
அதில், முதல் ரகம் ரூ. 23 , 2 வது ரகம் ரூ.13 ,3வது ரகம் ரூ.6 , 4 வது ரகம் ரூ.1 என்ற வீதம் விலை நிர்ணயித்து விவசாயிகளிடம் இருந்தும்,இடைத் தரகர்கள் மூலமாகவும் ஏற்றுமதி நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றனர்.
இவற்றை மதிப்பு கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறப்படுகிறது. இந்த வெள்ளரி பயிரிடுவதன் மூலம் அனைத்து செலவுகளும் போக விவசாயிக்கு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ. 25 ஆயிரம் கிடைக்கிறது என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.இதனால் கடந்த சில ஆண்டுகளாக வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நிகழாண்டில் மட்டும் வடகாடு,கீழாத்தூர்,மாங்காடு புள்ளான்விடுதி,கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 100 ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடகாடு விவசாயி பிரபாகரன் கூறியது:கடந்த மூன்று ஆண்டுகளாக நெல்,சோளம் வாழை உள்ளிட்ட சாகுபடிகள் போதியளவு அளவு விளைச்சல் தரவில்லை, விளைவித்த பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்கவில்லை.உரம், மருந்து விலை அதிகரிப்பு.கூலி ஆட்களின் சம்பள உயர்வு ஆகியவற்றால் சாகுபடிகள் தொடர் நஷ்டத்தை தந்தது.
தற்போது சாகுபடி செய்துள்ள வெள்ளரியில் கூலி ஆட்களின் சம்பளம், வெள்ளரி செடிக்கு கொடி கட்டுவதற்கு தேவைப்படும் கம்பு, கம்பி,சணல், உரம், மருந்து உள்ளிட்ட செலவுகள் போக ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கிடைக்கிறது.
மற்ற சாகுபடிகள் தொடர் நஷ்டத்தை தந்து எங்களை கைவிட்டது.ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை சாகுபடி செய்யப்படும் வெள்ளரி எங்களுக்கு ஆறுதலுக்காவது வருவாய் தருகிறது என்பதால் தற்போது வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
——————————-
இதற்க்கு பெயர் கிர்கின், நம்மால் இந்த வெள்ளரிகளை ஏற்றுமதிக்கு சப்ளை செய்ய முடியும் தேவைபட்டால் தொடர்பு கொள்ளுங்கள். ராஜன் 9943826447