“ஈகாமர்ஸ்” மூலம் ஏற்றுமதி செய்யுங்கள், என பல ஆண்டுகளாக நாம் தமிழ் மக்களுக்கு கூறி வருகிறோம், எழுதி வருகிறோம். இந்த வியாபாரத்தை பற்றி முழுமையாக தெரியாத மக்கள் உள்ளனர். இவர்களுக்கு அறிவுகண்ணை திறக்க வேண்டும், தொழில் வாய்ப்புகளை கிடைக்க வைக்க வேண்டும், ஈகாமர்ஸ் ஆன்லைன் தொழில் பற்றி ஆலோசனை, மற்றும் நடைமுறையில் செயல்படுத்தும் உதவிகளை “ஓம் முருகா குரூப்” உங்களுக்கு உதவிட தயாராக உள்ளது ஆலோசனை பெற தொடர்பு கொள்ளுங்கள் 9943826447 tamilembassy@gmail.com
ஈகாமர்ஸ் துறையில் இந்தியாவிற்கு அபரீதமான வளர்ச்சி காத்து கொண்டு இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு ஈகாமர்ஸ் தொழில் மூலம் வியாபாரம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் உள்நாட்டு ஈகாமர்ஸ் மார்கெட் ரூ.18000 கோடி இதை விட வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு 3 மடங்கு வாய்ப்பு காத்து இருக்கிறது. 2013 ஆம் ஆண்டு உலக நாடுகளில் நடந்த எலக்ட்ரோனிக் பொருள்களின் ஈகாமர்ஸ் வர்த்தகம் ரூ. 62000 கோடி. 2014 ஆம் ஆண்டு 30% கூடுதலான விற்பனைக்கு வழியுள்ளது.
இந்திய பாரம்பரிய உடைகள், கைவினைபோருள்கள், லெதர் பாஷன் ஐட்டம், ஆபரணங்கள், ஆகியவற்றிக்கு ரூ.11000 கோடிக்கு உள்நாட்டில் ஆன்லைன் மூலம் தொழில் நடைபெறுகிறது. ஈகாமர்ஸ் மூலம் ரூ.48000 கோடிக்கு இந்தியா மொபைல், லாப்டாப், புஸ்தகங்கள் ஆகிவற்றை வாங்குகிறது. ரிசர்வ் பாங்க ஆப் இந்தியா ஆன்லைன் வர்த்தகத்திற்கு கட்டுபாடை 1.8 லட்சதில் இருந்து 6 லட்சத்திற்கு உயர்த்தி உள்ளது. இதன் மூலம் ஹால்மார்க் நகைகள் ஆன்லைனில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
யு எஸ், ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்திய பொருள்களுக்கு ஆன்லைன் வர்த்தகத்தின் (ஈகாமர்ஸ்) மூலம் அதிக வாய்ப்பு உள்ள நாடுகள். சீனா, ஜெர்மனி, மலேசியா, சிங்கபூர் நாடுகள் இந்தியாவிற்கு முன்னுரிமை இறக்குமதி மையங்கள். நடுத்தர மற்றும் சிறிய தொழில் முனைவோர் ஈபே அல்லது அமேசான் போன்றவற்றை பயன்படுத்தி கொள்கிறார்கள், வியாபாரம் பெருகியவுடன் சொந்தமாக ஈகாமர்ஸ் தனியாக வெப்சைட் கடைகளை துவங்கி கொள்கிறார்கள்.
உலக அளவில் ஆன்லைனில் ரீடைல் வர்த்தகம் மட்டுமே நடந்து வருகிறது தற்பொழுது மொத்த வியாபாரத்திற்கும் இதனை பயன் படுத்த ஆரம்பித்து உள்ளார்கள். சீனா ரூ. 1,20,000 கோடிக்கு ஆண்டுக்கு ஈகாமர்ஸ் மூலம் அயல்நாடுகளுக்கு விற்பனை செய்து ஏற்றுமதி செய்கிறது. இந்தியா ரூ.11,000 கோடிக்கு தான் அயல்நாடுகளுக்கு விற்பனை செய்கிறது. நாடுகளுளின் எல்லை கோட்டை தாண்டி நடக்கும் ஈகாமர்ஸ் வணிகம் 2013 ஆம் ஆண்டு ரூ. 6,30,000 கோடி யில் இருந்து 2018 ஆம் ஆண்டு ரூ.18,42,000 கோடிக்கு வளர இருக்கிறது.
தற்பொழுது 15000 இந்திய வியாபாரிகள் ஈபே மூலம் 9 லட்சம் பொருள்களை 31 நாடுகளுக்கு விற்பனை செய்கிறார்கள். இந்தியாவில் 2638 நகரங்களில் இருந்து 141 நாடுகளில் இருந்து பொருள்களை ஈபே மூலம் வாங்குகிறார்கள். 36% ஏற்றுமதியாளர்கள் 20% வளர்ச்சி அடைந்து உள்ளனர். 30% ஆன்லைன் வியாபாரிகள் 21%-40% வரை வளர்ச்சி அடைந்து உள்ளனர்.