பொருட்களைச் சந்தைப் படுத்துவதில்தான் எத்தனை விந்தைகள் உள்ளன.நிலவரத்தை வரிசைப் படுத்தியுள்ளேன். படித்து மகிழுங்கள்!!!

marriage-proposal1
நிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்
சந்திக்கிறீர்கள்.
“நான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து கொள்கிறாயா?”
என்று நீங்கள் கேட்டால் அதுதான் நேரடியாக சந்தைப் படுத்துதல்
(That’s Direct Marketing)
———————————————–
2
நிகழ்ச்சி ஒன்றிற்கு, நண்பர்களுடன் செல்கின்றீர்கள். அங்கே
மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைப் பார்த்து அசந்து
போய் விடுகிறீர்கள். அதைக் கண்ட உங்கள் நண்பர்களில்
ஒருவர் அவளிடம் சென்று, உங்களைக் காட்டி,
“அவர் மிகப் பெரும் செல்வந்தர், அவரை மணந்து கொள்!”
என்று சொன்னால் அதுதான் விளம்பரப்படுத்துதல்!
(That’s Advertising.)
————————————————-
3.
நிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்
சந்திக்கிறீர்கள்.அவளிடம் பேசி, அவளுடைய தொலைபேசி எண்னைப்
பெற்றுக் கொண்டு, அடுத்த நாள், அவளைத் தொலைபேசியில் அழைத்து,
“நான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து கொள்”
என்று நீங்கள் சொன்னால் அதுதான் தொலைபேசி மூலம் சந்தைப் படுத்துதல்
(That’s Telemarketing)
———————————————————
4
நிகழ்ச்சி ஒன்றில் இருக்கிறீர்கள். ஒரு அழகான, தேவதைபோன்ற
தோற்றமுடைய பெண்ணைச் சந்திக்கிறீர்கள். நீங்கள் உங்கள் டை,
மற்றும் கோட்டைச் சரி செய்து கொண்டு, இன்முகத்தோடு அவளை
வரவேற்றுப் பேசுகிறீர்கள். அவளுக்கு கூல் டிரிங்க்ஸ் எடுத்துக்
கோண்டுபோய்க் கொடுக்கிறீர்கள். அவளுக்கு ஃபபே முறையில்
வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் உணவுகளை நீங்கள் வாங்கிக்
கொடுத்து அவள் சாப்பிட உதவுகிறீர்கள். பிறகு அவள் புறப்படும்
சமயத்தில் உங்களுடைய காரில் அவளை ஏற்றிக் கொண்டுபோய்
அவள் வீடு திரும்ப உதவுவதோடு, அவள் இறங்கு முன்பு, ஓடிச் சென்று
கார் கதவைத் திறந்து விட்டு, அவள் சொகுசாக இறங்க உதவி
செய்கிறீர்கள். அதோடு அவள் இறங்கியவுடன், விடைபெறும்போது,
“புறப்படுகிறேன். புறப்படுமுன்பு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்
நான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து கொள்கிறாயா?”
என்று நீங்கள் கேட்டால் அதுதான் பொதுத் தொடர்பு மேலான்மை
(That’s Public Relations)
—————————————————————–
5.
நிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்
சந்திக்கிறீர்கள். அவள் தானாகவே வந்து, “நீங்கள் மிகப் பெரும்
செல்வந்தர். உங்களுக்குத் தகுந்த மனைவியாக நான் இருப்பேன்.
என்னை மணந்து கொள்கிறீர்களா?” என்று கேட்டால் அதுதான்
உங்கள் பொருட்களுக்குச் சந்தையில் உள்ள மதிப்பு!
(That’s Brand Recognition)
—————————————————————-
6.
நிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்
சந்திக்கிறீர்கள்.
“நான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து கொள்கிறாயா?”
என்று நீங்கள் கேட்டவுடன், நீங்கள் எதிர்பார்க்காதவிதமாக அவள்
உங்கள் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒன்று கொடுத்து விட்டால் அதுதான்
வாடிக்கையாளரின் பதில்
(That’s Customer Feedback)
————————————————————-
7.
நிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்
சந்திக்கிறீர்கள்.
“நான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து கொள்கிறாயா?”
என்று நீங்கள் கேட்டவுடன், அவள் புன்னகையுடன் மறுத்து, தன்
கணவனை உங்களுக்கு அறிமுகப் படுத்தினால் அதுதான் சந்தை
நிலவரம்
(That’s demand and supply gap in the market)
————————————————————–
8.
நிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்
சந்திக்கிறீர்கள். அவள் அருகில் சென்று அவளுடன் பேச முயல்கிறீர்கள்.
அதற்குள் வேறு ஒரு நபர் அவளை நெருங்கி,
“நான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து கொள்கிறாயா?”
என்று கேட்டவுடன், அவள் புன்னகையுடன் சம்மதித்து, அவருடன்
சென்றுவிட்டால், அதுதான், சந்தையில் உள்ள போட்டியாளர்கள்
உங்களுடைய பங்கைத் தட்டிச் செல்வது!
(That’s competition eating into your market share)
—————————————————————-
9
நிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்
சந்திக்கிறீர்கள். “நான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து
கொள்கிறாயா?” என்ரு நீங்கள் கேட்க நினைக்கும் நேரத்தில் உங்கள்
மனைவி அங்கே வந்துவிட்டால், அதுதான் சந்தையில் புதிதாக
எதையும் நீங்கள் தேடிச் செயல் படுத்த முடியாத தளைகள் மற்றும்
கட்டுப்பாடுகள், வறைமுறைகள்
(That’s restriction for entering new markets)
—————————————–

“தொழில் பாடம்”
ஓம் முருகா குரூப்
+919943826447

1 Comment

  1. Dear Sir,

    GREETINGS FROM HARIMA EXPORTERS.

    When you will be in chennai. Please let know. I would like to meet you
    regd. Export. Can i get appointment.

    *Regards,*
    *H. Thiru*

Leave a reply to HARIMA EXPORTERS Cancel reply