கேள்வி: நான் மார்பில் இறக்குமதி செய்ய விரும்புகிறேன்…அதற்க்கான இறக்குமதி பாலிசி என்ன? என்ன அனுமதி பெர்மிடுகள் தேவைப்படும்?
ஓம் முருகா பதில்: 1. மார்பில் இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. DGFT அலுவலகத்தில் இருந்து லைசென்ஸ் பெற்று வேண்டுமானால் இறக்குமதி செய்யலாம்.
2. ரா மார்பில் கற்கள் இறக்குமதி செய்ய காலத்துக்கு காலம் அனுமதி வழங்குவதும் உண்டு.
3. பூட்டானில் இருந்து 10 லட்சம் சதுர அடி 5882 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யலாம், பூட்டான் அரசின் அனுமதியை பொருத்து, ஒரு வருட கணக்கு ஆண்டுக்கு இந்த கோட்டா அமலில் இருக்கும். வருடா வருடம் இது செல்லுபடி ஆகும் பிரிவு 25 மற்றும் 68ட்டின் கீழ்.
4. இலங்கை இந்தியா ISFTA “ப்ரீ ட்ரேடு அக்ரிமெண்ட்” உடன்பாட்டின் படி கல்கத்தா போர்ட் வழியாக இறக்குமதி செய்யலாம். இது எக்ஸிம் கோடு 2515 11 00, 2515 12 10, 2515 12 20, 2515 12 90 என்ற நான்கு பிரிவுகளின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்றுமதி சம்பந்தமான கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்: 9943826447, tamilembassy@gmail.com