அதிகமாக தேன் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று, இந்தியாவில் இருந்து வருடத்திற்கு 8000 டன் தேனும் தேன் சார்ந்த பொருள்களும் ஏற்றுமதி செய்யபடுகிறது. தேனீ வளர்ப்பு ஒரு மிகச் சிறந்த ஏற்றுமதி வாய்ப்பு நிறைந்த ஒரு தொழில்.
தேனீ வளர்க்க குறைந்த மூலதனம் போதுமானது, தேனீ வளர்ப்பது பற்றி கோவையில் வேளாண் பல்கலைகழகம் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறது. இது தவிர எல்லா மாவட்டங்களிலும் இதற்கான பயிற்சி அளிக்கபடுகிறது.
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் சிறந்த தேனை போட்டி போட்டு வாங்குகிறார்கள். ஜெர்மன் நாடு மட்டும் ஓராண்டுக்கு 90000 டன் தேனை இறக்குமதி செய்கிறது. அங்கே ஒவ்வொரு தனி நபரும் ஆண்டுக்கு ஒன்றரை கிலோ தேனை சாப்பிடுகிறார்களாம். இந்தியர்கள் ஓராண்டுக்கு தனி நபர் சாப்பிடும் தேனின் அளவு எவலவ்வு தெரியுமா? 3 கிராம் மட்டுமே. ( என்னைக்கு நல்ல பொருள்களை இந்தியர்கள் உண்டு இருகிறார்கள்?)
தேன், மற்றும் இதர வேளாண் பொருள்களுக்கான ஏற்றுமதி குறித்த அணைத்து தகவல்களையும் பெங்களூரில் உள்ள அப்பீடா என்ற அமைப்பில் பெற்று கொள்ளலாம். அதன் முகவரி:
APEDA,
12/1, Palace Cross Road,
Banglore - 560020
Phone: 080-23343425
http://www.apeda.com