சேலம், நாமக்கல், ஆத்தூர் பகுதிகளில் அறிய வகை மூலிகை ஒன்று பயிரிடபடுகிறது. அதன் பெயர் கூர்க்கன், அதற்க்கு கண்வழி செடி, கார்த்திகை கிழங்கு செடி, செங்காந்தன் மலர் என பல பெயர்கள் உண்டு.வாத நோய்கள் மற்றும் மூட்டு வழியை குணமாக்கும் மருத்துவ குணம் இதற்கு உண்டு.
தாங்கள் உற்பத்தி செய்யும் இப்பயிர் எந்த நாட்டுக்கு போகிறது? அதன் விலை என்ன? என எதுவும் இந்த விவசாயிகளுக்கு தெரியாது. இந்த மூலிகை விதைகளைக் கிலோ 1000 ருபாய் மதல் 2300 ருபாய் வரை இடைதரகர்களிடம் விவசாயிகள் விற்கின்றனர். வெளிநாடுகளில் இதன் விலை ரூ.4000 க்கும் அதிகம்.
வியாபாரிகள் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளும் இடைத்தரகர்கள் விலையை கூட்டியும் குறைத்தும் தங்கள் விருப்பபடி செய்து எப்பொழுதும் தெளிவில்லாத சந்தையை உருவாக்கி வைத்து உள்ளனர். இதனால் பாதிக்கபடுவது விவசாயிகள் தான், இந்த பிரச்சனைக்கு நாம் ஓம் முருகா குடும்பத்தில் உருவாக்கும் தொழில் கூட்டு முயற்சியின் மூலம் நல்ல தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தில் கூர்க்கன் பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒருங்கினைக்க வேண்டும். அவர்கள் விவசாயம் செய்து விளையும் சரக்கை, நாம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நேரடி ஏற்றுமதி ஆர்டர் எடுத்து நல்ல விலையை நம் தமிழ் விவசாயிகளுக்கு பெற்று கொடுக்க வேண்டும்.
——————-
“வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது
நம் தமிழ் சமூகமாக இருக்க வேண்டும்”.
தமிழ் தூதர்.ராஜன் 9943826447