200 தமிழர்கள் இனைத்து தொழிற்சாலை, ஏற்றுமதி இறக்குமதி

ஓம் முருகா குடும்பத்தில் உலக தமிழர் அனைவரும் ஒன்று சேர்ந்து தொழிற்சாலை ஒன்றை துவங்க உள்ளோம் இதனை பற்றிய விளக்கம் கேள்வி பதிலாக இங்கே கொடுத்து உள்ளோம்.

1). கேள்வி: என்ன பொருளை தயார் செய்ய போகிண்டீர்கள்?

பதில்: ஏற்றுமதி செய்ய கூடிய நிலகடலை பருப்பு.

2).கேள்வி: இந்த தொழில் எவ்வாறு நடைபெறும்?

பதில்: ஆந்திரா, தமிழகம், கர்நாடகாவில் இருந்து நிலகடலை மார்கெட் மூலம் வாங்கபடும். நமது பாக்டரிக்கு கொண்டு வந்து ஓடுகளை உடைத்து சுத்தம் செய்யப்படும். ஏற்றுமதிக்கு தயார் செய்யப்படும் பல ஏற்றுமதியாளர்கள் சென்னையில் உள்ளார்கள் அவர்களிடம் விற்பனை செய்யப்படும். படிப்படியாக நேரடி ஏற்றுமதி ஆர்டர் எடுத்து ஏற்றுமதி செய்யப்படும்.

3). எவ்வளவு மொத்த முதலீடு ஆகும் ஒருவர் பங்கு எவ்வளவு?

மொத்த முதலீடு 1 கோடி
ஒருவர் பங்கு ரூ. 50000
200 பங்குகள் மொத்தம்.
50 லட்சம் கடலை பாக்டரி தொழிலுக்கும்.
50 லட்சம் ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கும் முதலீடு செய்யப்படும்.

4). பங்குதாரர்கள் தொழிலில் ஈடுபட முடியுமா?
முடியும், அதற்கான ஊதியமும் பெற முடியும்.

5). ஏன் இந்த தொழில் முயற்சி?
பல தமிழர் சுய தொழில் செய்ய ஆசை பட்டு பலரிடம் நம்பி ஏமார்ந்து வருகிறார்கள். அனைவரும் ஒன்று பட்டு எடுக்கும் இந்த கூட்டு முயற்சியின் வெற்றி அவர்களுக்கு பாடமாக அமையும். மேலும் தொழில் வளர்ச்சி ஏற்படும், தனிப்பட்ட இழப்புகள் குறியும் வாழ்வு மேம்படும்.

6). வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழரும் கூட்டு சேரலாமா?
தமிழர் என்ற ஒரு தகுதி மட்டும் இருந்தால் போதும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த தொழிலில் கூட்டு சேரலாம்.

7). வெளிப்படையாகவும், உண்மையாகவும் தொழில் நடைபெறுமா?

தொழிற்சாலை முழுவதும், அலுவலக நிர்வாகம் முழுவதும் காமிரா பொருத்தப்பட்டு அனைத்து பங்குதாரர்களும் அதனை தனது மொபைல் மூலம் நேரடி மேற்பார்வை செய்யும் வண்ணம் தொழில் நுட்பம் பயபடுதபட உள்ளது.

8). லாப நட்ட கணக்கு எப்போது கிடைக்கும்?
வருடத்திற்கு ஒரு முறை லாப நட்ட கணக்கு வெளியிடப்படும். பங்குதாரர் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக அறிமுகம் செய்து வைக்கபடுவார்கள். கூட்டு முயற்சிக்கு அனைவரின் ஆதரவும் கிடைக்கும்.

9). எப்போது தொழில் ஆரம்பிக்கபடும்?

200 பங்குதார்களை ஒன்று திரட்டும் பணி ஆரம்பிக்க பட்டு உள்ளது. அனைவரும் ஒன்று இணைந்தவுடன் இந்த தொழில் முயற்சி துவங்கும். முகனூலில் இது பற்றி வெளியிடப்படும்.

10). இந்த தொழில் திட்டத்தில் பங்கு பெற விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் பெயர்:
தொடர்பு தொலைபேசி எண்:
ஈமெயில் அட்ரஸ்:

இவற்றை tamilembassy@gmail.com என்ற ஈமெய்லிற்கு அனுப்பி வைக்கவும். கம்பனி பதுவு வேலைகள் நடந்து வருகிறது ஷார் ரெடி ஆனவுடன் உங்களை தொடர்பு கொள்கிறோம்.

எப்பொழுது கூட்டாக “கடலை பாக்டரி” துவங்கும்?
———————————-
1. ப்ரைவேட் லிமிடட் கம்பனி பதிவு செய்யப்பட வேண்டும்,
2. முதலீட்டாளர்கள் நேரடி சந்திப்பு நடத்த வேண்டும்,
3. சந்திப்பின் முடிவில் விண்ணப்பங்கள் கொடுக்கப்படும்,
4. வெளிநாட்டில் உள்ள முதலீடலர்களுக்கு தகவல் ஈமெயில் செய்யப்படும்,
5. விண்ணப்பதை பூர்த்தி செய்து பாங்கில் டி.டி எடுத்து தொழிற்சாலை பெயரில் அனுப்ப வேண்டும்,
6. பணம் ஒன்று சேர்க்கப்பட்ட பிறகு “கடலை பாக்டரி” வேலை துவங்கும்.
——————-
தமிழ் தூதர்.ராஜன் 9943826447

3 Comments

  1. அண்ணன்
    அவர்க்கு வணக்கம்
    கடலை பேக்டரி. முதலீடு. வாய்ப்பு உள்ளதா

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s