மூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு

Herb
மூலிகை ஏற்றுமதி பற்றி விவசாயிகளிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. மூலிகை வளர்பதற்கு ஏற்ற தட்ப வெட்ப நிலை, மண்வளம் இயற்கையாக நாம் தமிழர்களிடம் உண்டு. மூலிகைகளை சாகுபடி செய்பவர்கள் மற்றும் ஏற்றுமதி செய்பவர்களுக்கும் பல்வேறு மான்யங்கள் மற்றும் அரசு சலுகைகள் வழங்கபடுகிறது.

நெல்லி, அஸ்வகாந்தா, துளசி, கண்வழி விதை, கோலியாஸ், நெருஞ்சி, நித்ய கல்யாணி, அவுரி போன்ற 32 வகையான மூலிகைகளை மத்திய அரசின் தேசிய மருத்துவப் பயிர்கள் வாரியம் கண்டுபிடித்து அவற்றின் உற்பத்தியை பெருக்க பல்வேறு திட்டங்களுடன் சாகுபடி செலவில் சுமார் 25 சதவிகிதம் மான்யமும் வழங்கி வருகின்றது.

கலப்படம் அற்ற சுத்தமான, தரமான மூலிகைகளை இந்திய விவசாயிகளிடம் இருந்து நேரடியாக இறக்குமதி செய்ய, பல்வேறு உலக நாடுகளில் இருந்து மருந்து நிறுவனங்கள் தயாராக உள்ளன.

குறிப்பாக ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, இத்தாலி, போன்ற நாடுகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. ரசாயன பூச்சி மருந்துகள் தெளிக்காத, இயற்கை விவசாயத்தில் விளைந்த சான்றிதல் பெற்ற மூலிகைகளை ஜப்பானும், ஜெர்மனியும் இறக்குமதி செய்து கொள்ள தயாராக இருகிறார்கள்.

இது தவிர, மொத்த ஏற்றுமதி மதிப்பில் சுமார் 6 சதவிகிதம் கொல்கத்தாவில் உள்ள ஷெல்லாக் அண்ட் பாரஸ்ட் ப்ராடக்ட் எக்ஸ்போர்ட் ப்ரோமோஷன் கவுன்சில், மூலிகை ஏற்றுமதியாளருக்கு ஊக்கத் தொகையாக வழங்கி வருகிறது.

மேலும் தகவல் தெரிந்து கொண்டு அறிவை வளர்த்து கொள்ளுங்கள், நாம் அனைவரும் ஒன்றினைத்து ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யபோகிறோம்.( https://www.facebook.com/events/288515304653642/?ref_dashboard_filter=upcoming ) உங்கள் அறிவு அதற்க்கு கண்டிப்பாக உதவிடும், என் தமிழ் தம்பிகளே, தங்கைகளே இதோ அதற்க்கான விலாசங்கள்:

NATIONAL MEDICINAL PLANTS BOARD,
MINISTRY OF HEALTH & FAMILY WELFARE,
GOVERNMENT OF INDIA,
CHANDRALOK BUILDING,
36, JANPATH, NEW DELHI 110 001
PH: 011- 43517451
WEB: http://www.nmpb.nic.in

SHELAC AND FOREST PRODCUT EXPORT PROMOTION COUNCIL,
INTERNATIONAL TRADE FACILITATION CENTER,
VANIJYA BHAVAN,
1/1, WOOD STREET, KOLKATTA – 700 016.
PH: 033-22834417
WEB: http://www.shellacepc.com

Advertisement

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s