1). குறைந்த வட்டிக்கு வங்கி கடன். (8%-9% மட்டுமே வட்டி)
2). வரி சலுகை: பொருள்களை வாங்கும் பொழுது கட்டிய வரி, ஏற்றுமதியாளருக்கு திரும்ப கிடைத்துவிடும்.
3). விவசாய பொருள் ஏற்றுமதிக்கு உதவி:
“விசேஷ் க்ரிஷி கிராம உத்யோக் யோஜனா” என்ற பெயரில் ஊக தொகை அரசு கொடுகிறது. FOB மதிப்பில் 5 சதவிகிதம் வரையில் சலுகை கிடைக்கும். வேளாண் உற்பத்தியை பெருக்க ஏதேனும் இறக்குமதி செய்தால் 10% வரி சலுகை கிடைக்கும்.
5). வட்டி இல்லாத கடன்:
மத்திய மாநில அரசு இனைத்து இந்த கடனை தருகிறது. நீங்கள் செய்த முதலீட்டில் 20% வட்டி இல்லாத கடன் கிடைக்கும் மேலும் தகவலுக்கு:
இயக்குனர்,
தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிகம் மற்றும் குழுமம்,
தமிழ்நாடு வேளாண் விற்பனைத்துறை வளாகம், இரண்டாவது மாடி,
திரு. வி. க. தொழிற்பேட்டை கிண்டி, சென்னை 600 0032.
வேளான்மைகாக இறக்குமதி செய்த பொருளின் வரியிலும், உள்நாட்டில் வாங்கிய பொருளின் கலால் வரியிலும் 80% வரை திரும்பி தரபடுகிறது.
6). டூட்டி டிரா பாக்:
இதன் மூலம் விலையை குறைத்து வெளிநாட்டு சந்தையில் போட்டி போட அரசு உதவி செய்கிறது. இதில் இரண்டு விதம் உண்டு
a. ஆள் இண்டஸ்ட்ரி ரேட், ஆண்டு தோறும் மத்திய அரசு என்ன என்ன பொருள்களுக்கு டூட்டி டிரா பாக் உண்டு என்ற அட்டவனையை வெளியிடும்.
b. ப்ராண்ட் ரேட்: அட்டவணையில் இல்லாத பொருளை ஏற்றுமதி செய்தவர் ரெகார்டுகளை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள டூட்டி டிரா பாக் அலுவலகத்தில் விண்ணபித்தால், தனியாக ஒரு டூட்டி டிரா பாக் விகிதம் வழங்கப்படும் அது தான் ப்ராண்ட் ரேட். இது குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுமே தரப்படும். ஸ்பெஷல் ப்ராண்ட் ரேட் என்பதும் உண்டு.
7). ஏற்றுமதி மண்டலங்களில் செயல்படும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வருமான வரி கட்ட வேண்டியதில் இருந்து விலக்கு பெறுகின்றன. சிறப்பு பொருளாதார மண்டலங்களும் வரி சலுகை பெறுகின்றன.
8). அங்கிகரிக்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் வர்த்தக துறை மற்றும் ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு இரண்டு சேர்ந்து வெளிநாட்டில் சேமிப்பு கிடங்கு அமைக்க, விளம்பரம் செய்ய, சந்தை ஆய்வு மேற்கொள்ள, ஷோ ரூம்கள் அமைத்திடவும் நிதி உதவி தரபடுகிறது.
9). சந்தை உருவாக்கு நிதி:
இந்த நிதி உதவியின் கீழ் ஒருவர் வருடத்திற்கு 2 முறை விமான பயணம் மேற்கொள்ள நிதி கிடைக்கும், லத்தின் அமெரிக்கா, மற்றும் கரீபியன் நாடுகளுக்கு செல்ல மேலும் ஒரு முறை நிதி கிடைக்கும்.
10). ஏற்றுமதி கடன்:
ப்ரிஷிப்மென்ட் கிரெடிட், போஸ்ட் ஷிப்மெண்ட் கிரெடிட் என இரண்டு வகையில் கடன் கிடைக்கும். ஏற்றுமதிக்கு பொருளை உற்பத்தி செய்ய கிடைப்பது ப்ரிஷிப்மென்ட் கடன், ஏற்றுமதி பொருளை கப்பலில் ஏற்றிய பிறகு கிடைக்கும் கடன் போஸ்ட் ஷிப்மெண்ட் கடன். வட்டி மிகவும் குறைவு, மதிப்பு கூடு வரியும் கிடையாது VAT
***********************************
மேலும் தகவல் வேண்டுவோர் நேரடியாக தமிழ் எக்ஸிம் கிளப் நிறுவனரை 9943826447 என்ற தொலைபேசி என்னில் முன் அனுமதி பெற்று நேரடியாக சந்திக்கவும்.