சர்வதேச மார்க்கெட்டில் “கருப்பு தங்கம்’ என வர்ணிக்கப்படும் தலைமுடி, இந்தியாவிலிருந்து கடந்த 1960ம் ஆண்டிலிருந்து தலைமுடி ஏற்றுமதி தொடங்கியது. திருப்பதி கோவில் தேவஸ்தானம் நீள முடி 1 கிலோ 8,500 ரூபாய்க்கும், குட்டை முடியை 1 கிலோ 50 ரூபாய்க்கும் விற்கிறது. இவற்றைவாங்கி பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் வருடந்தோறும் ரூ.2500 கோடிக்கு தலைமுடியை ஏற்றுமதி செய்கின்றன.
இந்திய தலைமுடிக்கு அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் கிராக்கி நிலவுகிறது. இந்தியாவைப் போன்று மற்ற நாடுகளில்பல ரகங்களில் தலை முடி கிடைக்காததே இதற்கு காரணம். ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் இந்த தலைமுடிகள் மூலம் அமினோ அமிலம் போன்ற ரசாயனங்களை தயாரிக்கின்றனர்.
இந்தியாவில் இருந்து தலை முடி தரை மார்கமாக மியான்மற்கு கடத்த படுகிறது. சீனா தான் முடி வர்த்தகத்தில் மிக பெரிய வியாபாரி ஆண்டுக்கு ரூ.30,000 கோடிக்கு ஏறுமதி விற்பனை செய்கிறது. இந்தியா 2500 கோடிக்கு ஏற்றுமதி விற்பனை செய்கிறது.
வெளிநாட்டவர் இந்திய முடி என்றால் மிகவும் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் சீனா தங்கள் முடிகளுக்கு நடுவில் இந்திய முடிகளை கலந்து ஏற்றுமதி செய்வது உண்டு. ரெண்டு விதமான முடிகள் உண்டு
இது மிகவும் தரமானது திருப்பதி போன்ற கோவில்களில் இருந்து இது பெறபடுகிறது.
இது ஊர்கள் தோறும் குரவர்கள் சேகரித்து மொத்த வியாபாரியிடம் விற்கப்பட்டு வருகிறது. லட்ச கணக்கான மக்கள் இந்த முடி வியாபார தொடர்பில் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். நாள் ஒன்றுக்கு இந்த நான்ரெமி முடி 1.2 கோடி மதிப்பு உள்ளவை மியான்மற்கு தரைவழி கடத்தப்பட்டு அங்கு சுத்தம் செய்யப்பட்டு சீனாவிற்கு விற்பனை ஆகிறது. திருப்பதி கோவிலில் ஆண்டுக்கு 200-300 கோடிக்கு அங்கு கிடைக்கும் முடிகள் ஏழாம் விடபடுகிறது.
விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களில், சிகை அலங்கார கடைகள், வீடுகள் மற்றும் கோவில்களில் சேகரிக்கப்படும் மனித தலைமுடி, செழிப்பானதாகவும், வெளி நாடுகளில், அதிக விலை கிடைக்கிறது. இப்பகுதியில் உள்ள சிம்மாச்சலம், துவாரகா, திருப்பதி, அன்னாவரம் போன்ற கோவில்களில் சேகரிக்கப்படும் தலைமுடி, தரம் பிரிக்கப்பட்டு, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தலைமுடி, 1 கிலோ, 50 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை, தரத்திற்கு ஏற்றாற்போல், விலைக்கு விற்கப்படுகிறது. இதில், ‘விர்ஜின் ரெமி’ என்ற முடிக்கு தான், அதிக கிராக்கி.
தமிழ் எக்ஸிம் கிளப்பிற்கு முடி இறக்குமதி செய்ய ஆர்டர் கிடைத்து உள்ளது. இந்த பொருளை ஏற்றுமதி செய்ய விரும்பும் தம்பிகள் உடனே 9943826447 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
இந்த தொழில் பற்றி நாம் எழுதி உள்ள கட்டுரை பயன்படலாம்,