இறக்குமதியாளர் விரல் நுனியில் நமது சந்தை நிலவரங்களை தெரிந்து வைத்து இருக்கும் காலம் இது. நேர்மையாகவும் நாணயமாகவும் நடந்து கொண்டால் தொழில் வளர்ச்சி நிச்சயம். தமிழகத்தில் இருந்து அன்றாடம் பயன்படுத்தும் எல்லா பொருள்களுமே ஏற்றுமதி செய்யபடுகிறது. தரமான பொருளை தேர்வு செய்வதில் இருந்து ஒவ்வொரு வகை பொருள்களுக்கும் ஏற்றவாறு பாகேஜிங் செய்து, எவ்வளவு விரைவாக ஏற்றுமதிக்கு அனுப்பி வைக்கிறோமோ அதில் தான் எற்றுமதியாலரின் வெற்றி அடங்கி இருக்கிறது.
உதாரணத்திற்கு: வெளிநாடுகளில் உள்ள சூப்பர் மார்கெட்டுகளில் காய்கறிகளின் விற்பனை அதிகமாக இருக்கும். இங்கு இருந்து அனுப்பி வைக்கப்படுகின்ற சரக்கு வெள்ளிகிழமை மாலைக்குள் அங்கு சென்றடைய வேண்டும். அப்பொழுது தான் அவற்றை பிரித்து எடுத்து சனி, ஞாயிறு அன்று கடைகளுக்கு அனுப்பி வைக்க முடியும். எனவே, புதன் கிழமையே தோட்டங்களுக்கு சென்று தரமான பொருள்களை வாங்கி, சுத்தம் செய்து, அன்று மாலைக்குள் ஏற்றுமதிக்காக சமர்ப்பித்து விட வேண்டும். அப்பொழுது தான் அந்த சரக்கு வியாழன் தவறினால் வெள்ளி மாலைக்குள் குறிப்பிட்ட இடத்திற்கு போய்ச் சேர்ந்து விடும். ஏற்றுமதியாலரின் மெத்தன போக்கினால் ஒருந்தால் தாமதமாகப் போய்ச் சேர்ந்தாலும் விற்பனை தலை கீழாகி விடும். காலத்தை திட்டமிட்டு கவனமாக செய்ய வேண்டியது அவசியம்.
இது ஒரு நாள் வியாபாரம் அல்ல ஆண்டு தோறும் நடைபெறுவதால், இருவரின் நட்பிலும் எந்த வித பாதிப்பும் வராத வண்ணம் பார்த்து கொள்ளவேண்டும். நேர்மையாக நடத்து கொள்பவர்களே ஏற்றுமதி வாணிகத்தில் வெற்றி பெற முடியும். இறக்குமதியாளருக்கு வருத்தம் ஏற்படாமலும், சந்தேகம் வராமலும் இருந்தால் தான் தொடர்ந்து ஏற்றுமதி செய்ய முடியும்.
———————-
தமிழ் எக்ஸிம் கிளப் 9943826447
http://www.tamileximclub.com