1. PAN பாண் - பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர்:
இன்கம் டாக்ஸ் (ஐ.டி) நம்பர் தான் பாண் நம்பர், அனைத்து விதமான தொழில்கள் இந்த பாண் நம்பருடன் இணைக்கப்பட்டு உள்ளது. 10 நம்பர்கள் உள்ள அல்பா நியுமரிக் எண்களாக இருக்கும். தனி நபருக்கு, மற்றும் உங்கள் நிறுவன பெயர்கு தனியாகவும் பாண் நம்பர் பெற வேண்டும்.
2. தனி நபரின் பாண் நம்பர் சொந்த தொழில் நிறுவன பெயர்க்கும் போதுமானதா? தனி நபரின் தொழில், பார்ட்னர் தொழில், பிரைவட் லிமிடட் கம்பனி இவற்றிக்கு எப்படி பாண் கார்ட் நம்பர் எடுப்பது?
சுயமாக சொந்த தொழில் செய்பவர்களுக்கு, உங்கள் சொந்த பாண் நம்பர் போதுமானது, உங்கள் தொழிலில் பார்ட்னர் இறுக்க கூடாது.
பார்ட்னர் ஷிப் தொழிலாக இருந்தால் தனியாக பாண் நம்பர் எடுக்கப்பட வேண்டும். பாண் விண்ணப்பம் செய்யும் பொழுது ஒவ்வொரு பார்ட்னருடைய பாண் நம்பரையும் அதில் குறிப்பிட வேண்டும்.
“பிரைவட் லிமிடட் கம்பனி” அல்லது, தனியாக பாண் நம்பர் வாங்க வேண்டும், விண்ணப்பிக்கும் பொழுது ஒவ்வொரு டைரெக்டர்கல் பாண் நம்பரும் குறிப்பிட வேண்டும்.
தொழில் உலகில் அடியெடுத்து வைக்கும் அனைவர்க்கும் பல கேள்விகள் மனதில் ஏற்படும். எங்கு போய் இதை பற்றி விசாரிப்பது என்றால் படித்த தமிழ் தம்பிகள் படிக்காத மக்களுக்கு தங்கள் அறிவை பகிர்ந்து கொள்ள மறுக்கிறார்கள், இதனால் நமது தமிழ் சமுகம் முன்னேறாமல் இருந்து வருகிறது நீங்கள் கற்று கொண்ட கல்வியை கொண்டு நமது தமிழ் சமுகம் வளர முயற்சி எடுங்கள். ஓம் முருகாவுடன் இனைந்தும் செயல்படலாம் வாருங்கள்….தமிழ் தூதர்.ராஜன் 9943826447
super informations