இந்தியாவில் நீங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்ய இம்போர்ட் எக்ஸ்போர்ட் கோடு மிகவும் அவசியம். உங்கள் நிறுவனம் அமைந்து உள்ள ஏரியாவிற்கு அருகில் உள்ள டி ஜி எப் டி அலுவலகத்தில் பெற வேண்டும். ஐ ஈ சி கோடு இல்லாமல் பொருள்களை நாட்டின் எல்லையை விட்டு அனுபவோ பெறவோ முடியாது.
கீழ்க்கண்ட டாகுமேண்டுகள் ஐ ஈ சி கோடு வாங்க தேவை:
—————————-
1. பான்க் ரெசிப்ட் / டிமாண்ட் ட்ராப்ட் அப்ளிகேசன் பீசுக்கு எடுக்கவேண்டும். அப்பளை செய்யும் முன் உங்கள் அருகில் உள்ள டி ஜி எப் டி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
2. டி ஜி எப் டி கொடுத்து உள்ள ஐ ஈ சி கோடுக்கு என அவர்கள் வெளியிட்டு உள்ள Appendix 21B.2 படிவத்தை முழுவதும் நிரப்பப்பட்டு இறுக்க வேண்டும்.
3. ஏற்றுமதி இறக்குமதி நடவடிகைகாக உங்கள் கம்பனி கரண்ட் அக்கவுண்ட் நீங்கள் துவங்கி உள்ள வங்கி மேலாளரின் கையொப்பம் சீல், ஐ ஈ சி கோடு விண்ணபத்துடன் இருக்க வேண்டும். வங்கி மேலாளரின் பரிந்துரை கடிதம் உங்கள் கம்பனி பெயர் மற்றும் வங்கி கணக்கு எண் குறிப்பிட்டு இருந்தால் மேலும் சிறப்பு.
4. உங்கள் கம்பனியின் பாண் நம்பர் போட்டோ காப்பி எடுத்து அதில் நீங்கள், மற்றும் பார்ட்னர்கள் கையொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இனைத்து அப்பளை செய்யுங்கள்.
5. அப்ளிகேசன் செய்பவரின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அந்த போட்டோ மீது நீங்கள் கையொப்பம் இட்டு இருக்க வேண்டும், வங்கி கடித லெட்டரிலும் உங்கள் படம் ஒட்டி கிராஸ்சா கையோபமிடுங்கள்.
6. எண் ஆர் ஐ, பி ஐ ஒ, ஒ சி ஐ, வெளிநாட்டவர் உங்கள் கம்பெனியில் முதலீடு செய்து அதன் லாபம் பின்னர் அவர்கள் எடுத்து செல்ல வேண்டும் என சூழ்நிலை இருந்தால், ரீபார்டிசன் பெனிபிட் பிரிவில், தலைமை வங்கி ரிசர்வ் வங்கியில் அப்ரூவல் வாங்கி விண்ணபத்துடன் இனைத்து இருக்க வேண்டும்.
7. டி ஜி எப் டி யின் ஐ ஈ சி கோடு விண்ணப்பம் அவர்கள் வெப்சைட்டில் கிடைக்கும், அதனை நிரப்பி நீங்கள் ஆன்லைன் மூலமும் அப்பளை செய்யலாம்.
8. ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்பதை சப்மிட் செய்த பிறகு ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து அணைத்து சப்போர்டிங் டாக்குமெண்டுகளையும் இணைத்து அனுபவேண்டும்.
9. உங்கள் சொந்த முகவரி உள்ள ஒரு போஸ்டல் கவரை இணைத்து அனுபவும் மறக்காமல் ரூ.25 அல்லது போஸ்ட் அலுவலகத்தில் கேட்டு மேலே ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும் ஐ ஈ கோடு சர்டிபிகேட் அந்த கவரின் மூலம் தான் அனுப்பி வைப்பார்கள்.
10 எந்த கரண்ட் அக்கவுண்டை நீங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்ய பயன்படுத்த இருகிரீர்களோ அந்த அக்கவுண்டை மட்டுமே விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
11. கொடுத்த தகவலில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவன மாறுதல்கள் ஏதும் இருந்தால் 90 நாட்களுக்குள் நீங்கள் டி ஜி எப் டி யில் தெரிவித்து விட்டால் இலவசமாக செய்து கொடுப்பார்கள் எக்ஸ்ட்ரா பீஸ் கிடையாது. பிறகு செய்தால் ஒவ்வொரு மாறுதலுக்கும் ரூ.1000 செலவாகும்.
12. உங்கள் அப்ளிகேசன் ஸ்டேடஸ் ஆன்லைன் மூலம் என்ன நிலவரத்தில் உள்ளது என்பதை சோதித்து கொள்ளலாம். இதற்கு கஸ்டம்ஸ் இணையதளமும் உதவிடும்.