உலக அளவில், 63 நாடுகளில், மா மரங்கள் உள்ளன.இந்தியாவில், 1.90 கோடி டன் மாம்பழம் உற்பத்தியாகிறது.தமிழகத்தில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 926 ஹெக்டேர் பரப்பில், மா சாகுபடி நடக்கிறது.
தமிழக அளவில்,மாம்பழ உற்பத்தியில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள், முதலிடம் வகிக்கின்றன. இங்கு சாகுபடியாகும், தோத்தாபுரி, அல்போன்சா மற்றும் ராஸ்புரி ரகங்கள், 40 சதவீதம் மாம்பழக்கூழ் தயாரிக்க பயன்படுகிறது. மாம்பழக்கூழ் உற்பத்திக்கு, இங்கு, 60 தொழிற்சாலைகள் உள்ளன.
சீசனில், 80 ஆயிரம் டன் மாம்பழங்களில் இருந்து, 40 ஆயிரம் டன், மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 90 சதவீதம், சவுதி அரேபியா, துபாய், ஏமன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும், மாம்பழ பருவ காலத்தில், 75 நாட்கள் மட்டுமே, மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளில், உற்பத்தி நடக்கும்.
கர்நாடக மாநிலம், கோலார், ஆந்திர மாநிலம், பாங்காரு பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து, மாம்பழங்களை, கொள்முதல் செய்து, தொழிற்சாலைகளுக்கு கொண்டு வர வேண்டிய நிலை. தினமும், 3,000 டன் வரை, இப்படி கொள்முதல் செய்யப்படுகிறது.
சீன இறக்குமதியாளர்கள், தமிழகத்தில் இருந்து, அதிக அளவில், மாம்பழக்கூழ் கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அரபு நாடுகளிலும், தமிழக மாம்பழக்கூழுக்கு, அதிக வரவேற்பு கிடைத்து உள்ளது. தமிழர்களுக்கு என்றும் நாம் தொழில் செய்ய வேண்டிய உதவிகளை அளித்து வருகிறோம், கேள்விகள் இருப்பின்: 9943826447